களத்தடுப்பில் சக வீரர் மீது மோதி காயமடைந்த தென்னாபிரிக்க வீரர் ஃபப் டு பிளெஸ்சிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் (பி.எஸ்.எல்) போட்டிகள் அபுதாபியில் நடந்து வருகின்றன. இதில் 19வது லீக் போட்டி ஒன்றில், குவெட்டா கிளாடியேட்டர்ஸ் மற்றும் பெஷாவர் ஜால்மி அணிகள் விளையாடியுள்ளன.
இந்த போட்டியின் 7 ஓவரில் டேவிட் மில்லர் அடித்து ஆடினார். பந்து பவுண்டரியை நோக்கி சென்றது. குவெட்டா அணியில் இடம் பெற்ற தென்னாபிரிக்க வீரர் ஃபேப் டு பிளெஸ்சிஸ் அதனை தடுக்க ஓடினார்.
இதில் சக வீரரான முகமது ஹஸ்னைனின் காலில் அவரது தலை மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்து சுருண்டு விழுந்த அவருக்கு அணி மருத்துவர் முதலுதவி சிகிச்சை அளித்து உள்ளார்.
இதனை தொடர்ந்து பிளெஸ்சிஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு பரிசோதனைகள் நடந்து வருகின்றன. பிளெஸ்சிசுக்கு பதிலாக போட்டியில் அயூப் விளையாடுகிறார்.