சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐ.சி.சி ) Hall of Fame கௌரவத்திற்குரியவர்கள் பட்டியலில், இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காரவின் பெயரும் இணைக்கப்பட்டுள்ளது.
ஐ.சி.சியின் Hall of Fame பட்டியலில் இணைக்கப்பட்ட 2 வது இலங்கை குமார் சங்கக்கார ஆவார். முன்னதாக, முத்தையா முரளிதரன் இந்த பட்டியலில் இணைக்கப்பட்டிருந்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டின் மதிப்புமிக்க வரலாற்றைக் கொண்டாடுவதற்காகவும், முதல் ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை முன்னிட்டும் சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) ஐ.சி.சி Hall of Fame பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் 10 வீரர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றில் மகத்தான சாதனையாளர்களான 10 வீரர்களே இந்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இப்போது 10 வீரர்கள் Hall of Fame பட்டியலில் இணைக்கப்பட்டதை தொடர்ந்து, ஐ.சி.சி வரலாற்றில் Hall of Fame கௌரவத்திற்குள்ளான வீரர்களின் எண்ணிக்கை 103 ஆக உயர்ந்துள்ளது.
இன்று வெளியிடப்பட்ட பட்டியலில் குமார் சங்கக்கார, அன்டி ஃப்ளவர் நவீன யுகத்தின் வீரர்களாக பட்டியலில் உள்ளனர்.
ஆரம்பகால கிரிக்கெட் சகாப்தத்தில் (1918 க்கு முன்), அவுஸ்திரேலியாவின் மான்டி நோபல், தென்னாபிரிக்க ஆப்ரி பால்க்னர் பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளது. உலக யுத்தத்திற்கு இடையிலான காலத்தில் (1918-1945), மேற்கிந்தியத் தீவுகளின் லியரி கான்ஸ்டன்டைன் மற்றும் அவுஸ்திரேலியாவின் ஸ்டான் மெக்கேப் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
1946-1970 பிந்தைய சகாப்த பிரிவில், இங்கிலாந்தின் டெட் டெக்ஸ்டர் மற்றும் மங்காட் தேர்வு செய்யப்பட்டனர். ஒருநாள் சகாப்தத்தில், மேற்கிந்திய தீவுகளின் டெஸ்மண்ட் ஹேன்ஸ் மற்றும் மறைந்த பொப் வில்லிஸ் ஆகியோர் பெயரிடப்பட்டனர்.