நாடு முழுவதும் கொரோனா இரண்டாவதுழ அலை வேகமாக பரவி வரகிறது. இதை கட்டுப்படுத்த மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
அதே நேரத்தில் தவிர்க்க முடியாத சூழலில் உயிரிழப்புகள் ஏற்படுவதால் நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.
குறிப்பாக பீகார், அசாம், மேற்கு வங்கம், டெல்லி, உத்தரபிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த இரண்டு வாரங்களில் மருத்துவர்களுக்கு எதிரான வன்முறை தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனை தடுக்க மருத்துவமனைகள் பாதுகாக்கப்பட்ட மண்டலங்களாக அறிவிக்கப்பட வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வன்முறைகள் தொடர்ந்தால் நாடு முழுவதும் போராட்ட நடத்த முடிவு செய்துள்ளனர்.
ஒரு வேளை போராட்டம் நடத்த முடிவு செய்தால் சிகிச்சையில் உள்ளவர்கள், புதியதாக தொற்று பாதிக்கப்பட்டோரும் அவதி பட வேண்டிய அவல நிலை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.