25.8 C
Jaffna
January 9, 2025
Pagetamil
குற்றம்

அத்தியாவசிய சேவையாம்: 250 கால் போத்தலுடன் சிக்கிய இளைஞன்!

முல்லைத்தீவு நகர் பகுதியில் மீன் ஏற்றி செல்லும் வாகனத்தில் 250 கால் போத்தல் சட்டவிரோத மதுபானங்களை கொண்டு சென்ற இளைஞர் ஒருவரை சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளார்கள்.

பயணக்கட்டுப்பாட்டு நேரத்தில் அத்தியாவசிய சேவையாக வாகனங்களில் மீன்களை ஏற்றி செல்வதற்கான அனுமதிப்பத்திரத்தினை பயன்படுத்தி புதுக்குடியிருப்பில் இருந்து முல்லைத்தீவு நோக்கி செல்கையில் கரைச்சிக்குடியிருப்பு பகுதியில் வைத்து சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முள்ளியவளை நீராவிப்பிட்டி பகுதியினை சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர் பயணித்த வாகனமும் முல்லைத்தீவு பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

நாளை இவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முல்லைத்தீவு பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.

பயண தடை விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் மதுபான சாலைகள் மூடப்பட்ட்டுள்ளதால் முல்லைத்தீவு நகரம் , முள்ளியவளை , புதுக்குடியிருப்பு பகுதிகளில் மதுபான போத்தல்கள் 5000- 10000 ரூபா வரையில் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றமையும் குறிப்பிட தக்கது

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

வீடு உடைத்து பெண்ணை வல்லுறவுக்குள்ளாக்கி கொள்ளையடித்தவருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

Pagetamil

கசிப்பு குடிக்க ரூ.300 தராத மனைவியை அடித்துக் கொன்ற முரட்டுக் கணவன்

Pagetamil

பெண்ணுடன் எக்குத்தப்பாக நடந்த பொலிஸ்காரர் கைது!

Pagetamil

யாழ்ப்பாணத்தில் மலைவிழுங்கி மனேஜர் கைது!

Pagetamil

சிறுவர் இல்லத்தில் சீரழிக்கப்பட்ட 9 வயது சிறுமி!

Pagetamil

Leave a Comment