யானைகள் இந்த உலகின் மிக முக்கியமான உயிரினம். யானைகள் புத்தி கூர்மையான விலங்கு. பார்க்க பெரிதாக இருந்தாலும் யானைகள் கருணை உள்ளம் படைத்தது. இப்படிபட்ட யானையின் வீடியோ ஒன்று தான் தற்போது டிரெண்டாகி வருகிறது.
அசாம் மாநிலம் கவுகாத்தி அரகே நாராங்கி என்ற பகுதிக்குட்பட்ட சட்கேயான் என்ற பகுதியில் ராணுவ முகாம் ஒன்று உள்ளது. இந்த ராணுவ முகாம் இரக்கும் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு யானை ஒன்று வந்துள்ளது. அந்த யானை அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கின் கைப்பிடியலிருக்கும் கண்ணாடியில் மாட்டப்பட்டிருந்த ஹெல்மெட்டை தன் துதிக்கையால் எடுத்து வாயில் போட்டுவிட்டு அங்கிருந்து சென்றுள்ளது.
Digest this: #Elephant from adjoining Amchang forest gobbles up a helmet in #Guwahati's Satgaon area. Wonder how it tasted! pic.twitter.com/VLQOzgzoLJ
— Rahul Karmakar (@rahconteur) June 10, 2021
இந்த சம்பவம் அப்பகுதியிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ பார்த்தவர் பெரும் ஆச்சரியத்திற்கு தள்ளப்பட்டனர். ஹெல்மெட்டை யானை சாப்பிட்டதை யாராலும் எளிதாக நம்ப முடியவில்லை. ஆனால் அந்த வீடியோவில் முழுமையாக ஹெல்மெட்டை சாப்பிட்டதா? அல்லது சும்மா வாயில் வைத்துவிட்டு கீழே போட்டு விட்டதா என யாருக்கும் தெரியவில்லை. இந்த யானை ஹெல்மெட் சாப்பிட்டது குறித்து பலர் பல்வேறு கருத்துக்களை கூறுகின்றனர்.