யாழ் மாவட்டத்தில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றினால் உயரிழந்துள்ளார்.
பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்த 68 வயதான வயோதிபர் நேற்று (11) இரவு உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை, ஐயனார் கோவிலடியை சேர்ந்த முதியவர் ஒருவர் வேறு நோய்க்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா தொற்று கண்டறியப்பட்டார்.
எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53ஆக உயர்ந்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1