பிக் பாஸ் ஷோவுக்கு போட்டியாக தற்போது தமிழில் Survivor என்ற சர்வதேச புகழ் ரியாலிட்டி ஷோ தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பிக் பாஸ் இந்தியாவில் மிக பிரபலமாக வருவதற்கு முன்பே வெளிநாடுகளில் பிக் பிரதர் என்கிற பெயரில் நடந்து வந்தது. தற்போது இந்தியாவிலும் மிகப்பெரிய ஹிட் ஆன இந்த ஷோ ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் உருவாக்கப்பட்டு வருகிறது.
சின்னத்திரையில் கலக்கிவரும் பிக் பாஸ் ஷோவுக்கு போட்டியாக தற்போது ஒரு புது நிகழ்ச்சி வரப்போகிறது. சர்வைவர் என்கிற பெயரில் வெளிநாடுகளில் பாப்புலர் ஆன ஷோ தான் அது.
ஒரு தனித்தீவில் எந்த வித தொடர்பும் இல்லாமல் போட்டியாளர்கள் தங்கவைக்கப்படுவார்கள். அங்கு அவர்களுக்கு சுவாரஸ்யமான டாஸ்குகளும் கொடுக்கப்படும். அங்கு உயிர்பிழைத்து வாழ்வது மட்டுமின்றி டாஸ்குகளிலும் சிறப்பாக செய்யும் நபருக்கு 100 நாட்கள் இருக்கும் பட்டம், பரிசு வழங்கப்படும். ஜீ நெட்ஒர்க் இதை தயாரிக்க உள்ளது.
மொத்தம் 16 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள். பிக் பாஸ் போலவே இதிலும் சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் தான் பங்கேற்க இருக்கின்றனர். இதில் தொகுப்பாளராக வர, சிம்பு தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நட்ந்து வருகிறதாக கூறப்படுகிறது.