மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் என்ற இடத்திற்குட்பட்ட சில பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் காணப்படும். அவ்வப்போது காட்டிற்குள்ளிருந்து சிறுத்தைகள் ஊருக்குள் வரும். அவ்வாறு வரும் சிறுத்தைகளை கண்காணிக்க அப்பகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் சிறுத்தை நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்த சிறுத்தை ஒன்று அங்கிருந்த ஒரு வீட்டின் வாசலில் தூங்கி கொண்டிருந்த
நாய் குட்டியை தூக்கி சென்றுள்ளது. இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை தற்போது ஏஎன்ஐ நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோவில் தெருவில் நடந்து வரும் சிறுத்தை ஓன்று வீட்டு வாசலில் தூங்கி கொண்டிருக்கும் நாய் குட்டியை பார்க்கிறது. பின்னர் மெதுவாக அந்த வீட்டிற்குள் பதுங்கி பதுங்கி நுழைந்து நாய் தூங்கி கொண்டிருக்கும் இடத்திற்கு சென்று நாயை கவ்விக்கொண்டு அங்கிருந்து தப்பிவிடுகிறது. அந்த காட்சிகள் அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது.
#WATCH | Maharashtra: A leopard hunts a pet dog sleeping outside a house in Bhuse village of Nashik.
(Source: CCTV footage) pic.twitter.com/sHZ1O6VUEE
— ANI (@ANI) June 11, 2021