2005 – ஆம் ஆண்டில் ரஜினி நடித்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் வெற்றி நடைபோட்ட சந்திரமுகி படத்தில் பிரபு, ஜோதிகா, வினீத், வடிவேலு என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கும். இந்த படத்தில் முதலில் ஜோதிகா நடித்த கங்கா கதாபாத்திரத்தில் சிம்ரன் தான் கமிட் ஆகி நடித்தார்.
ஆனால் அவர் அந்த சமயத்தில் கர்ப்பம் ஆகி விட்டதால் இந்த படத்தில் இருந்து விலகிக்கொண்டார். இதுபோல் இந்த படத்தில் ரஜினி நடிப்பதற்கு முன்பு கன்னடத்தில் ஹிட்டான ஆப்தமித்ரா படத்தை ரீமேக் செய்ய முடிவு செய்தார் பிரபு. அப்போது அந்த படத்தில் செந்தில் கதாபாத்திரத்தில் மாதவனையும்,
சரவணன் என்னும் ரஜினி நடித்த கதாபாத்திரத்தில் முதலில் பிரபுவும் நடிப்பதாகவும், இந்த படத்தை சின்ன பட்ஜெட்டில் தயாரிப்பதாக இருந்தார்கள். அதன் பிறகு ரஜினி “இந்த படத்தில் நான் நடிக்க ஆசைப்படுகிறேன்” அதன் பிறகு நடிக்க இருந்த நடிகர்கள் எல்லோரும் மாறினார்கள். இந்த தகவல் பிரபல யூடியூப் சேனலில் பிரபு அவர்களே உறுதி செய்துள்ளார்.
இந்தநிலையில் சந்திரமுகி இரண்டாம் பாகத்தை முதல் பாகத்தை இயக்கிய பி வாசு அவர்கள் இயக்கப் போவதாகவும், அதை தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரிக்கப் போவதாகவும், ராகவா லாரன்ஸ் நடிக்கப் போவதாகவும் அதிகாரப்பூர்வமான தகவல் சில வருடங்களுக்கு முன் வந்தது.