கொரோனா தொற்றின் 2வது அலைக்கு இந்தியா முழுவதும் 719 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் தங்களது குடும்பத்தினரிடம் இருந்து விலகி கடுமையாக போராடி வருகின்றனர். தொற்று எதிராக தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களில் தொற்று பாதித்த 719 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.
பீகாரில் அதிகபட்சமாக 111 மருத்துவர்களும், டெல்லியில் 109 மருத்துவர்களும், உத்தரபிரதேசத்தில் 79 மருத்துவர்களும், மேற்கு வங்கத்தில் 63 மருத்துவர்களும், ராஜஸ்தானில் 43 மருத்துவர்களும், ஜார்கண்ட் மற்றும் காஷ்மீரில் 39 மருத்துவர்களும், ஆந்திராவில் 35 மருத்துவர்களும், தெலங்கானாவில் 36 மருத்துவர்களும், குஜராத்தில் 37 மருத்துவர்களும், ஒடிசாவில் 28 மருத்துவர்களும், மகாராஷ்டிராவில் 23 மருத்துவர்களும், தமிழகத்தில் 21 மருத்துவர்களும், மத்திய பிரதேசத்தில் 16 மருத்துவர்களும், அசாம் 8 மருத்துவர்களும், கர்நாடகாவில் 9 மருத்துவர்களும், கேரளாவில் 24 மருத்துவர்களும், மணிப்பூர், சத்தீஸ்கரில் தலா 5 மருத்துவர்களும், ஹரியானா, பஞ்சாபில் தலா 3 மருத்துவர்களும், கோவா, திரிபுரா மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் தலா 2 மருத்துவர்களும், பாண்டிச்சேரியில் ஒருவர் என 719 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.