துருக்கி நாட்டில் உரிமையாளர் ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்படுவதை அறிந்த அவரது செல்லப்பிராணி அந்த வாகனம் பின்னே மருத்துவமனை வரை ஓடிய வீடியோ வைரலாகி வருகிறது.
இஸ்தான்புல் நகரில் வசித்த பெண் ஒருவர் கோல்டன் ரெட்ரீவர் ரக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.இதை அறிந்த நாய் உரிமையாளர் மீதான அன்பால் ஆம்புலன்ஸ் பின்னே பல கிலோமீட்டர் ஓடியது. மருத்துவமனை வரை ஓடிய அந்த நாய் உரிமையாளர்களுக்காக மருத்துவமனை வாசலிலேயே காத்துக் கிடந்த காட்சி காண்போரை நெகிழ்ச்சி அடையச் செய்தது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1