கொரோனா நோயாளிகளை கவனிக்க ரோபோ தயாரித்த ஹொங்கொங்!

Date:

கொரோனா நோயாளிகளைக் கவனிப்பதற்காக புதிய வகை ரோபோவை ஹொங்கொங் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த ரோபோவுக்கு அவர்கள் கிரேஸ் என்று பெயரிட்டுள்ளனர். முதியவர்கள், கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொள்ளும் வகையில் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.

தாதியரைப் போல நீல நிற உடை இந்த ரோபோவுக்கு அணிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரோபோவுக்கு ஆசிய பிராந்திய அம்சங்கள் புரோகிராம் செய்யப்பட்டுள்ளன. இந்த ரோபோ தனது மார்புப் பகுதியில் உள்ள கருவிகள் மூலம் மனிதர்களின் உடல் வெப்பத்தை பரிசோதிப்பதோடு, செயற்கை நுண்ணறிவுத் திறன் (ஏஐ) மூலம் நோயாளிகளின் பிரச்சினைகளை எளிதில் கண்டறிகிறது.

இதன்மூலம் முன்களப் பணியாளர்களின் பணிச்சுமையைக் குறைக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஈரானில் நடந்த மக்கள் போராட்டங்களின் பின்னணியில் இருந்ததை பகிரங்கமாக்கிய ட்ரம்ப்!

டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடந்த மாபெரும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின்...

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை விதிப்பு

​சாத்​தான்​குளம் தந்​தை, மகன் கொலை வழக்​கில் குற்றவாளி​கள் 9 பேருக்​கும் மரண...

இந்த வாரம் முதல் புதன் விடுமுறை இரத்து!

இந்த வாரம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில், புதன்கிழமைகளில் வழங்கப்பட்ட அரச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்