கொடைக்கானல் அருகே அதிசய ராட்சத சிலந்தி வலை பின்னப்பட்டுள்ளதால் ஊரடங்கின் பலனாக இயற்கை தன்னுடைய பாதைக்கு மீண்டும் திரும்புவதாக சமூக ஆர்வலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே இருக்கிறது குப்பம்மாள் பட்டி என்ற கிராமம். இந்த கிராமத்தில் இருந்து ஒட்டன்சத்திரம் செல்லக்கூடிய வழியில் சிலந்தி ராட்சச வலை ஒன்று பின்னி இருக்கிறது.
இந்த வலை இரண்டு மரங்களையும் இணைத்து பின்னப்பட்டுள்ளது. வழக்கமாக சிலந்தியின் வலை மிகவும் சிறியதாகத் தான் இருக்கும். ஆனால் தற்போது இந்த மரங்கள் முழுவதும் வலை பின்னப்பட்டு இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
2011 ஆண்டின் கணக்கின்படி உலகத்தில் மொத்தம் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலந்தி வகைகள் இருப்பதாக தெரிகிறது. இதில் கொடைக்கானலில் 40க்கும் மேற்பட்ட சிலந்தி வகைகள் இருப்பதாக கூறப்படுகிறது.
தம் உடலில் சுரக்கும் சுரபியின் வைத்து மெல்லிய வலைகள் பின்னுகிறது. மேலும் சிலந்தியின் வலைக்குள் சிக்கும் பூச்சிகள் சிலந்திகளுக்கு உணவாக மாறுகிறது. இதில் ஒரு சில சிலந்திகள் விஷத்தன்மை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
வழக்கமாக மனிதர்கள் இருக்கக்கூடிய இடங்களில் சிலந்திகள் வலை பின்னினால் அந்த சிலந்திகள் உடனடியாக மனிதர்களால் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. காடுகளில் இருக்கக்கூடிய சிலந்தி வலைகள் மட்டுமே நிரந்தரமாக அதனுடைய ஒரு தங்கும் இடமாக இருப்பது வழக்கம்.
தற்போது தமிழகம் முழு ஊரடங்கு உள்ளதால் போக்குவரத்து முழுவதுமாகவே துண்டிக்கப்பட்டு இருக்கிறது. இந்த போக்குவரத்து துண்டிப்பு காரணமாக மலைச்சாலைகளில் இருக்கக்கூடிய இருபுறங்களிலும் வனப் பகுதிகள்தற்போது தன்னுடைய பழைய நிலைக்கு திரும்பி வருகிறது.
இதன் காரணமாகவே சிலந்தி வலை பின்னப்பட்டுள்ளதாகவும், எந்த தொந்தரவும் இல்லாததால் அப்படி வலை உள்ளதாகவும் சிலந்தி வலை மிகவும் அபூர்வமாக காணப்படுகிறது.
சராசரியாக 30 அடிக்கு மேலாக இந்த இந்த சிலந்தி வலை அமைந்திருக்கிறது ஒரு மரத்தில் இருந்து மற்றொரு மரத்திற்க்கும் இந்த சிலந்தி வலை தன்னுடைய விரித்துள்ளது. மேலும் இந்த சிலந்தி வலை மிகவும் ஆச்சரிய படுத்துவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஊரடங்கின் பலனாக இயற்கை தன்னுடைய பாதைக்கு மீண்டும் திரும்புவதாக சமூக ஆர்வலர் கருத்து தெரிவித்துள்ளனர்.