27.8 C
Jaffna
December 28, 2024
Pagetamil
உலகம்

“இங்கு குண்டான மனிதர்கள் வாடகைக்கு விடப்படும்” ஜப்பானில் துவங்கப்பட்ட விநோத நிறுவனம்!

நம்மால் ஒரு விஷயத்தை பெற முடியவில்லை என்றால் அதை குறுகிய காலத்திற்கு வாடகைக்கு எடுக்கும் பழக்கம் மக்களான நம் மத்தியில் இருக்கிறது.

இப்படியாக ஜப்பானில் ஒரு புதுவிதமான கலாச்சாரம் பரவியது. அவர்கள் மனிதர்களை வாடகைக்கு எடுக்கும் பழக்கத்தை கொண்டிருந்தனர். உதாரணமாக கார் ஓட்டுவதற்காக ஒருவரை வாடகைக்கு எடுப்பது, தனியாக செல்ல தயங்கும் இடங்களுக்கு துணையுடன் செல்ல ஒருவரை வாடகைக்கு எடுப்பது, என வித விதமான விஷயங்களுக்காக மனிதர்கள் வாடகைக்கு சென்றனர்.

இப்படியாக சமீபத்தில் Debucari என்ற புதிய நிறுவனம் ஒன்று குண்டாக இருக்கும் மனிதர்களை வாடகைக்கு விடும் சேவையை துவங்கியுள்ளது. அதாவது 100 கிலோ எடைக்கு அதிகமாக உள்ள நபர்களை அந்நிறுவனம் வாடகைக்காக அனுப்புகிறது. அந்நாட்டில் யாருக்காவது குண்டாக இருக்கும் நபர்கள் தேவை என்றால் இவர்களிடம் அப்படிப்பட்ட நபர்களை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம்.

இப்படி குண்டான மனிதர்களை வாடகைக்கு எடுக்க அந்நிறுவனம் ஒரு மணி நேரத்திற்கு 2 ஆயிரம் ஜப்பானிய யென்களை கட்டணமாக வசூலிக்கிறது. இதன் இந்திய மதிப்பு ரூ1300 ஆகும். பிளிஸ் என்பவர் தான் இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் ஏற்கனவே குண்டாக இருக்கும் மனிதர்களுக்கான ஆடை நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

குண்டான மனிதர்களை வாடகைக்கு எடுக்க பல்வேறு காரணங்கள் இருக்கிறது. நீங்கள் ஒரு நிகழ்ச்சிக்கு செல்லும் போது ஒல்லியாக தெரிய குண்டான ஒரு மனிதரை அழைத்து செல்லலாம். அதே நேரத்தில் உங்கள் கண் பார்வையில் குண்டான மனிதர் ஒருவர் இருந்து கொண்டே இருந்தால் நீங்கள் உங்கள் உடல் எடையை நினைத்து பெருமை கொள்வீர்கள் அதனால் தாழ்வு மனப்பான்மையிலிருந்த வெளியே வரலாம். அதே நேரங்களில் நிறுவனங்கள் டயட் பிளை எடுப்பதற்காக மாடலாகவும், ஆடை நிறுவனங்கள் பெரிய ஆடைகளை உருவாக்குவதற்கான மாடலாகவும் குண்டான மனிதர்களை வாடகைக்கு எடுக்கின்றனர்.

அதே நேரத்தில் ஜப்பானில் குண்டான மனிதர்களை தங்கள் நிறுவனத்தில் சேர்த்துக்கொள்ளவும் அந்நிறுவனம் முன் வந்துள்ளது. 18 வயதிற்கு அதிகமான 100 கிலோ எடைக்கு மேல் உள்ள யார் வேண்டுமானாலும் இந்த நிறுவனத்தில் சேரலாம். இதற்காக கட்டணம் முழுவதும் குண்டான மனிதருக்கே வழங்கப்படும் என்றும், கார்ப்பரேட் கமிஷன்கள் மீண்டும்நேரடியாக அந்நிறுவனத்திடமிருந்து தன் நிறுவனம் பெற்றுக்கொள்ளும் என்றும் அந்நிறுவனத்தின் நிறுவனர் பிளிஸ் கூறியுள்ளார்.

தன் ஆடை நிறுவனத்தில் குண்டான மனிதர்களை மாடலாக தேடுவது சிரமமாக இருந்த போது தான் தனக்கு இந்த சிந்தனை உதித்ததாகவும், இதை தற்போது சாத்தியப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த Debucari நிறுவனத்தில் டோக்கியோ, ஓசாகா, அய்சி ஆகிய நகரங்களில் உள்ள ஏராளமான குண்டு மனிதர்கள் பதிவு செய்து வைத்துள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அஜர்பைஜான் பயணிகள் விபத்துக்கு ரஷ்ய ஏவுகணை காரணமா?

Pagetamil

ஆப்கானிஸ்தானுக்குள் திடீர் வான் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்

Pagetamil

பறவை மோதியதால் விபரீதமா?: பயணிகள் விமானம் விபத்து; ஏராளமானவர்கள் பலி!

Pagetamil

ஜனாதிபதியாக இருந்தால்தான் கணவன்: சிரியாவிலிருந்து தப்பியோடிய ஆசாத்திடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி!

Pagetamil

உகண்டாவை உலுக்கும் டிங்கா டிங்கா வைரஸ்: இந்த வைரஸ் தொற்றினால் தொடர்ந்து நடனமாடிக் கொண்டேயிருப்பீர்கள்!

Pagetamil

Leave a Comment