மாணவர்கள் 4 பேரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் பாடசாலை அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரக்வாணை, போத்துபிட்டியில் இந்த சம்பவம் நடந்தது.
11 வயதிற்கும் 13 வயதிற்கும் இடைப்பட்ட 4 மாணவர்களே ஆசிரியரால் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சந்தேகநபர் 43 வயது திருமணமாகாதவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மாணவர்களின் நடத்தைகளில் மாற்றத்தைக் கண்டறிந்த பெற்றோர்கள், இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறையிட்டனர். விசாரணையில் மாணவர்களை, அதிபர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியது தெரியவந்தது.
இதனடிப்படையில் அதிபரை, ரக்வாணை பொலிசார் கைது செய்தனர்.
மாணவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக கஹவத்தை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், சந்தேகநபர் பெல்மடுல்ல நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.