புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் கிராமத்தில் இருந்து நேற்று (09) இரவு நந்திக்கடலுக்கு தொழிலுக்கு சென்றவரை காணவில்லை என உறவினர்கள் தேடியுள்ள நிலையில் இன்று மாலை பச்சைப்புல்மோட்டை வயல்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உந்துருளியில் பயணித்த இவர் உந்துருளியுடன் விழுந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
ஆனந்தபுரம் பகுதியினை சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான வேலு கணேஸ் (44) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் பிரோத பரிசோதனைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றார்கள்.


What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1