சினிமா

“என் அக்கா சென்னையில இருக்காங்க…” தமிழில் பேசி ஆச்சரியப்படுத்திய ஹாலிவூட் நடிகர் loki  வீடியோ

மார்வல்(MARVEL) வரிசை படங்களில் ‘லோகி’ LOKI பாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் டொம் ஹிடில்ஸ்டன். லோகி கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இந்த கதாபாத்திரத்தை மையப்படுத்தி ‘லோகி’ என்ற இணையத் தொடர்  உருவாகியுள்ளது. இந்த சீரிஸின் முதல் எபிசோடானது டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.

இந்த இணையத் தொடரிற்கான இணையவழி விளம்பர நிகழ்வில் நடிகர் டொம் ஹிடில்ஸ்டன் கலந்துகொண்டார். அந்த நிகழ்வில், இந்தியாவில் அவருக்கு பிடித்த நகரம் எது என்ற கேள்விக்கு, சென்னை என்றும் என்னுடைய அக்கா அங்கு வசிக்கிறார் என்றும் குறிப்பிட்டார். மேலும், சிலமுறை தான் சென்னைக்கு சென்றதாகவும், அது ஒரு சிறந்த நகரம் என்றும் குறிப்பிட்டார். இதில், அக்கா என்று அவர் தமிழில் கூறியதைக் கண்டு இன்ப அதிர்ச்சியடைந்த தமிழ் ரசிகர்கள், அந்தக்காணொளியை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். மேலும், இந்தியா என்றவுடன் அவருக்கு நினைவுவரும் விஷயம் எது என்ற கேள்விக்கு ஷாரூக்கான் என அவர் பதிலளித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

வைரமுத்து மீதான புகார்: ஓஎன்வி விருதை மறுபரிசீலனை செய்யப்போவதாக குழு அறிவிப்பு!

divya divya

தடுப்பூசி போட்டதால் தப்பித்தேன்: கொரோனாவுடன் போராடிய அஜித் பட நடிகர்!

divya divya

தனக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்த நடிகை சுனைனா!

divya divya

Leave a Comment

error: Alert: Content is protected !!