வாயில் வாள் ஒன்றினை வைத்து ரிக் ரொக் காணொளி செய்து சமூக ஊடகங்களில் பதிவிட்ட இளைஞனை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உரும்பிராய் சிவகுல வீதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே இன்று கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதில், அந்த பகுதியிலுள்ள ஆலயமொன்றின் வாளை வைத்தே ரிக்ரொக் செய்தது தெரிய வந்தது.
அதனால் அவர் வன்முறை கும்பலை சேர்ந்தவராக இருக்க வாய்ப்பில்லையென பொலிஸ் வட்டாரங்கள் கருதுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
2
+1