25 C
Jaffna
January 19, 2025
Pagetamil
இந்தியா

சேலை கட்டிக்கொண்டு குதிரை ஓட்டிய பெண்… யூடியூபில் மாதம் 1.5 லட்சம் சம்பாதிக்கிறார்!

ஒடிசாவில் பெண் ஒருவர் ஆண்களுக்கான வேலைகள் என சமுதாயத்தில் உள்ள ஸ்டீரியோ டைப்களை உடைத்து கார், பைக், கனரக வாகனம் உள்ளிட்டவைகளை ஓட்டி அதை வீடியோ அடுத்து வெளியிட்டு மாதம் ரூ1.5 லட்சம் சம்பாதிக்கிறார்.

ஒடிசா மாநிலம் ஜாஜ் பூர் மாவட்டம் ஜாஹல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மோனாலிசா பாந்த்ரா, இவர் திருமணமானவர். இவர் தனக்கான ஒரு யூடிப் சேனலை வைத்திருக்கிறார். அதில் அவர் பெண்கள் செய்ய தயங்கும் அல்லது சமூகத்தால் இது பெண்களுக்கான வேலையில்லை கருதும் வேலைகளை உடைக்கும் விதமான செயல்களை செய்து அதை வீடியோவாக பதிவு செய்து பகிர்ந்து வருகிறார்.

சமீபத்தில் இவர் சேலை அணிந்து கொண்டு குதிரை ஓட்டிய வீடியோ ஒன்றை தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவிவருகிறது. கடந்த 2016ம்ஆண்டு மே மாதம் முதல் இப்படியான வீடியோக்களை தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு வரும் மோனலிசாவிற்கு தற்போது 20 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் இருக்கின்றனர்.

அவரது யூடியூப் சேனலில் அவர் குதிரை ஓட்டும் வீடியோ, ராயல் என்பீல்டு பைக்கை ஓட்டும் வீடியோ, டர்போ டிரக்கை ஓட்டும் வீடியோ மருகங்களுக்கு உணவளிக்கும் வீடியோ என விதவிதமான வீடியோக்களை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோக்களை அவரது கணவர் பத்ரி நாராயண் பாத்ரா என்பவர் சூட் செய்து எடிட் செய்து அதை யூடியூப் சேனில் பதிவேற்றம் செய்கிறார். இந்த வீடியோக்கள் எல்லாம் தற்போது வைரலான நிலையில் மோனாலிசா இந்த யூடியூப் சேனல் மூலம் மாதம் ரூ1.5 லட்சம் சம்பாதிக்கிறார்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காதலனை விசம் வைத்து கொன்ற யுவதிக்கு தண்டனை ஒத்திவைப்பு: பெண்ணல்ல பிசாசு என சாடல்!

Pagetamil

ரூ.6 கோடி மதிப்பிலான நகைகளுடன் மகா கும்பமேளாவில் கவரும் தங்க பாபா!

Pagetamil

சயிப் அலி கானை கத்தியால் குத்தியவர் கைது: சிக்கியது எப்படி?

Pagetamil

இந்திய தேர்தல் குறித்து மன்னிப்பு கோரிய மெட்டா நிறுவனம்!

east tamil

“கூத்தாடி என்ற கூற்றை உடைத்தவர் எம்ஜிஆர்” – தவெக தலைவர் விஜய் உருக்கம்

Pagetamil

Leave a Comment