25.3 C
Jaffna
January 22, 2025
Pagetamil
இலங்கை

இணைய கற்கைக்காக சூம் செயலிக்கு பதிலாக புதிய செயலி: இலவச கட்டணத்துடன் அடுத்த வாரம் அறிமுகம்!

பாடசாலை மாணவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து இணையவழி கற்கையை மேற்கொள்வதற்கான புதிய செயலி அடுத்த சில வாரங்களில்  அறிமுகப்படுத்தப்படும் என்று டிஜிட்டல் தொழில்நுட்ப மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த செயலி, தற்போது பயன்பாட்டிலுள்ள சூம் போலவே இருக்கும். இலவச கட்டணத்துடன், இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் ஆதரவுடன் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

நேற்று நாடாளுமன்றத்தின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் இதனை தெரிவித்தார்.

கல்வி அமைச்சு எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் இணைய வழி வகுப்புகளில் கலந்துகொள்வதில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து கவலைகளை எழுப்பினார்.

இதற்கு பதிலளிக்கையிலேயே, நாமல் இந்த அறிவிப்பை விடுத்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘அர்ச்சுனாவை பிடித்து நீதிமன்றத்தில் நிறுத்துங்கள்… அவருக்கு வாக்களித்தவர்கள் வெட்கப்பட வேண்டும்’: சைவ குருமார் கொந்தளிப்பு!

Pagetamil

கைதடி கிணற்றில் மீட்கப்பட்ட சிசு: கள்ளக்காதலால் விபரீதம்… சகோதரியுடன் சிக்கியது எப்படி?

Pagetamil

மதுபான தொழிற்சாலை சுற்றி வளைப்பில் ஒருவர் கைது

east tamil

யாழில் கரையொதுங்கிய மற்றொரு மிதவை

Pagetamil

எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை குறைக்க முடியாது – ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க

east tamil

Leave a Comment