நைஜீரிய நாட்டைச் சேர்ந்த பிரபல காமெடி குழு ஜகமே தந்திரம் படத்தின் ட்ரைலரை மீண்டும் உருவாகியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Ikorodu Bois என்ற நைஜீரிய காமெடி குழு பிரபல பாடல்கள் மற்றும் ஹாலிவுட் படங்களின் ட்ரைலர்களை வேடிக்கையாக மீண்டும் உருவாக்குவர். அவர்களின் விடீயோக்களுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்.
தற்போது இந்தக் குழு ஜகமே தந்திரம் படத்தின் ட்ரைலரையும் மீண்டும் வேடிக்கையாக உருவாக்கியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
All we have to say to @IkoroduB is, "Super ra thambi, super ra"!#JagameThandhiram@dhanushkraja @karthiksubbaraj @Music_Santhosh @MrJamesCosmo @C_I_N_E_M_A_A @AishwaryaLeksh4 @KalaiActor pic.twitter.com/wGuoKGWXft
— Netflix India (@NetflixIndia) June 7, 2021
கார்த்திக் சுப்புராஜ் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் ஜூன் 18-ம் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்கு இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.