28.9 C
Jaffna
April 15, 2025
Pagetamil
கிழக்கு

ஏறாவூர் சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 2,000 பேருக்கு தடுப்பூசி!

ஏறாவூர் பிரதேச சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் சுமார் இரண்டாயிரம் பேருக்கு சினோஃபார்ம் கொரோனா தடுப்புசி செலுத்தும் பணிகள் இன்று (08) ஆரம்பிக்கப்பட்டன.

அடுத்த மூன்று நாட்களுக்கு செயற்படுத்தப்படும் இத்திட்டத்தின்கீழ் முதற்கட்டமாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் , பிரதேச செயலகம் மற்றும் நகர சபை ஊழியர்களுக்கும் இன்று தடுப்பூசி ஏற்றப்பட்டது.

மட்டக்களப்பு பிராந்திய தொற்றுநோயியலாளர் குணராஜா ஜயசேகரன் , பிரதேச சுகாதார வைத்தியாதிகாரி சாபிறா வசீம், பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி கீர்த்தி ஜயந்த ஆகியோரின் கண்காணிப்பில் இப்பணிகள் நடைபெற்றன.

09.06.2021 மிச்நகர் மற்றும் ஏறாவூர்-3 பிரிவு ஆகிய பிரதேசங்களிலுள்ள 60 வயதிற்கு மேற்பட்டோருக்கும், 10.06.2021 மீராகேணி மற்றும் ஏறாவூர்- 3 பிரிவு ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் வயோதிபர்களுக்கும், 11.06.2021 ஏறாவூர்- 2பி பிரதேசத்து வயோதிபர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

அரசாங்க அலுவலர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தடுப்பூசியை பெற்றுக்கொண்டதை அவதானிக்க முடிந்தது.

இதையும் படியுங்கள்

தாயை கொன்ற மகன்

Pagetamil

AI மூலம் யுவதிகளின் நிர்வாண படங்களை உருவாக்கிய இளைஞன் கைது!

Pagetamil

இறக்காமம் குவாஷி நீதிமன்ற நீதிபதிக்கு ஒரு மாதகால சிறைத்தண்டனை

Pagetamil

நிலாவெளியில் பொலிசாருடன் கயிறு இழுத்த இளைஞர்கள்… 10 பேருக்கு வலைவீச்சு!

Pagetamil

தென்கிழக்கு பல்கலை மாணவர்கள் போராட்டம்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!