வீடு இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டி : இடுப்பில் வைத்து தூக்கி ஆம்புலன்சில் அமர வைத்த வீரர்!

Date:

கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் இடையே சிக்கித் தவித்த 82 வயது மூதாட்டியை திண்டுக்கல் தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.

தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து திண்டுக்கல்லில் கடந்த 3 தினங்களாக மாலை நேரங்களில் தொடர்ந்து இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் வரை மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் திண்டுக்கல்லை அடுத்துள்ள பூதிப்புரம் பகுதியை சேர்ந்தவர் 82 வயதான தாமரை என்ற மூதாட்டியின் வந்த வீடு இன்று காலை இடிந்து விழுந்தது. இடிந்த வீட்டிற்குள் மூதாட்டி மாட்டிக் கொண்டார்.

இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக திண்டுக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக திண்டுக்கல் தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் குழுவினர் விரைந்து வந்து சுமார் ஒருமணி நேரம் போராடி மூதாட்டியை உயிருடன் மீட்டனர்.

தனது இடுப்பில் தூக்கி வைத்த வீரர். உடனடியாக அவரை சிகிச்சைக்காக திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விமானம் ரத்தானதால் ஆன்லைன் மூலம் ‘ரிசப்ஷனில்’ பங்கேற்ற புதுமண ஜோடி

இண்​டிகோ விமானம் திடீரென ரத்து செய்​யப்​பட்​ட​தால் புதுமண ஜோடி திருமண வரவேற்​பில்...

2026 வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு, திருத்தங்களுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்