பூவே பூச்சூடவா சீரியலில் இருந்து வெளியேறுகிறாரா ரேஷ்மா?

Date:

நடிகை ரேஷ்மா முரளிதரன் பூவே பூச்சூடவா சீரியலில் இருந்து விலக போகிறார் என பரவிய செய்தி உண்மை இல்லை என அவரே விளக்கம் கொடுத்து உள்ளார்.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘பூவே பூச்சூடவா’. 2018ல் இருந்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் தற்போது ஆயிரம் எபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த தொடரில் சக்தி என்ற ரோலில் நடித்து வருகிறார் ரேஷ்மா முரளிதரன்.

இதில் அழகிய நடிப்பை வெளிப்படுத்தி வரும் ரேஷ்மாவுக்கு அதிகம் அளவு ரசிகர்கள் கிடைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது ரேஷ்மா பூவே பூச்சூடவா சீரியலில் இருந்து விலக போகிறார் என தகவல் பரவியது.

ஆனால் அது உண்மையில்லை முற்றிலும் வதந்தி தான் என இன்ஸ்டாகிராமில் விளக்கம் அளித்து இருக்கிறார் நடிகை ரேஷ்மா முரளிதரன்.

“ஒரு வதந்தி பரவி கொண்டு இருக்கிறது. எனக்கு பதிலாக சக்தியாக வேறொரு நடிகை நடிக்க போகிறார் என பரவி வரும் செய்தி முற்றிலும் பொய் செய்தி. வருத்தப்படாதீர்கள். நான் திரும்ப வருவேன். Pls dont spread rumours” என ரேஷ்மா தனது பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில்!

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில்...

தரமற்ற நிலக்கரி ஊழலை விசாரிக்க கோரி போராட்டம்

தரமற்ற நிலக்கரி ஊழல் குறித்த தணிக்கை அறிக்கை மீது உடனடி விசாரணை...

லெபனானுடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவு: அடுத்த வாரம் அமெரிக்காவில் கூட்டம்!

ஹிஸ்புல்லாவை நிராயுதபாணியாக்குவதையும், "அமைதி உறவுகளை" ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு லெபனானுடன் நேரடிப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்