நமது மூளை, உடலின் மற்ற பகுதிகளைப் போலவே, நாம் உண்ணும் உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சிவிடும் தன்மை கொண்டவை. குழந்தைகளின் நினைவாற்றலை மேம்படுத்த மூளை ஆரோக்கியம் அவசியம். எனவே, குழந்தைகள் மூளையை ஊக்குவிக்கும் சத்தான உணவை உட்கொள்வது மிகவும் அவசியம் ஆகும். குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய உணவுகளை பற்றி நிபுணர்களின் கருத்தை தெரிந்து கொள்வோம்.
நாம் உண்ணும் ஆரோக்கியமான உணவு நமது நினைவாற்றல், செறிவு மற்றும் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும். மூளை, நமது உடலின் மற்ற பகுதிகளைப் போலவே, நாம் உண்ணும் உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சிவிடும் தன்மை உடையது. எனவே, குழந்தைகள் மூளையை ஊக்குவிக்கும் சத்தான மற்றும் ஆரோக்கியமான உணவை உட்கொள்வது மிகவும் அவசியம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
முட்டை
கார்போஹைட்ரெட், புரதசத்து மற்றும் கொஞ்சம் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுகளை காலையில் குழந்தைகளுக்கு கொடுப்பது, அவர்களை நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருக்க உதவும். முட்டையில் அதிகளவில் புரதம் நிறைந்துள்ளதால் இது நினைவாற்றலை மேம்படுத்த உதவுகிறது.
மீன்
எண்ணெய் மீன்களில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் நிரம்பியுள்ளது. இது மூளை வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்ததாகும். ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நமது உடல் செல்லின் கட்டுமானத் அமைப்புகளுக்கு தேவையான ஒன்றாகும். சால்மன், கானாங்கெளுத்தி, டுனா, மத்தி, ஹெர்ரிங் போன்ற மீன்களில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் அதிகளவில் உள்ளன. இந்த உணவை வாரத்திற்கு ஒரு முறை குழந்தைகளுக்கு கொடுப்பதை வழக்கமாக்கி கொள்ளலாம்.
ஓட்ஸ்
ஓட்ஸ் மூலம் தயாரிக்கப்படும் உணவு மூளைக்கு சிறந்த ஆற்றல் தரும் “எரிபொருள்” ஆகும். அவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இது குழந்தைகளுக்கு எளிதில் பசியை ஏற்படுத்துவதில்லை. இதனால் ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுகளை உண்ணுவதிலிருந்து குழந்தைகளை தடுக்க முடியும். இவற்றில் வைட்டமின்கள் ஈ, பி காம்ப்ளக்ஸ் மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது குழந்தைகளின் மூளை சிறப்பாக செயல்பட நமக்கு உதவுகிறது. ஆப்பிள், வாழைப்பழங்கள், அவுரிநெல்லிகள் மற்றும் பாதாம் போன்றவற்றையும் இதனுடன் சேர்த்துக்கொள்ளலாம்.
காய்கறிகள்
வண்ணமயமான காய்கறிகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகளவில் நிறைந்துள்ளன. அவை நமது மூளையில் உள்ள செல்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். தக்காளி, சர்க்கரை வள்ளி கிழங்கு, பூசணி, கேரட் மற்றும் கீரை போன்ற காய்கறிகள் நிச்சயம் உங்கள் குழந்தையின் உணவில் இடம் பெற வேண்டிய காய்கறிகள். குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி இந்த காய்கறிகளை சாஸ்கள் அல்லது சூப்களில் சேர்த்து கொடுக்கலாம்.
பால், தயிர் மற்றும் சீஸ்
பால், தயிர் மற்றும் சீஸ் ஆகியவற்றில் புரத சத்து மற்றும் பி வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை நமது மூளையின் திசு, நரம்பியக்கடத்திகள் மற்றும் என்சைம்களின் வளர்ச்சிக்கு முக்கியம். இவை அனைத்தும் மூளையின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த உணவுகளில் கால்சிய சத்து நிறைந்துள்ளதால், இது வலுவான பற்கள் மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கு முக்கியம். கால்சியம் சத்து தேவை குழந்தைகளின் வயதைப் பொறுத்து மாறுபடுகிறது. கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை குழந்தைகளின் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பாலில் கால்சியம் சத்து நிறைந்திருந்தாலும், சில குழந்தைகள் பாலை விரும்புவதில்லை. வேறு வழிகளில் குழந்தைகளின் உணவில் பால் சேர்க்கலாம். குறிப்பாக கஞ்சி, புட்டு மற்றும் அப்பம் போன்ற உணவுகளில், தண்ணீருக்கு பதிலாக பாலைப் பயன்படுத்தலாம்.