யால மற்றும் உடவளவ தேசிய பூங்காக்கள் வரும் 8ஆம் திகதி பிரான்ஸ் கட்ற்படை குழுவினர் பார்வையிட மட்டுமே திறக்கப்படும் என்று வனவிலங்கு இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க கூறுகிறார்.
இலங்கை கடற்படையின் வேண்டுகோளின் பேரில் இந்த சிறப்பு அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவித்தார்
பிரெஞ்சு மாலுமிகள் குழு இலங்கைக்கு உயிர் குமிழி பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வருவதாகவும், மாலுமிகளின் வருகையை சுற்றுலா அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது என்றும் தெரிவித்தார்.
பிரெஞ்சு கடற்படை அதிகாரிகள் குழு இலங்கைக்கு விஜயம் செய்யும் போதிலும், இரண்டு நாட்டு கடற்படை அதிகாரிகளுக்கு இடையே எந்த பயிற்சியும் நடைபெறாது என்று இலங்கை கடற்படை கூறியுள்ளது.




