தனது மகளின் முதல் பிறந்தநாளை குடும்பத்துடன் நடிகர் விமல் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
‘பசங்க’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விமல். அதன்பிறகு களவாணி, தூங்காநகரம், கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்டதிரைப்படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறார். தற்போது சண்டக்காரி, எங்க பாட்டன் சொத்து, மஞ்சள் குடை, குல சாமி படவா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் விமல், தனது மகள் ஆத்விகாவுக்கு முதல் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். கொரானா நேரத்தில் எளிமையாக கொண்டாடப்பட்ட இந்த விழாவில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் விமல் குடும்பத்துடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.