காதலை ஏற்க மறுத்த இளம் பெண்ணை கத்தியால் குத்தி கழுத்தை அறுத்து கொலை செய்த வாலிபரை கல்லால் அடித்து கிராம மக்கள் கொலை செய்தனர்
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள சம்பாயா கண்டிரிகை கிராமத்தை சேர்ந்தவர் சின்னா. அதே ஊரைச் சேர்ந்த சுஸ்மிதா என்ற இளம்பெண் செவிலியராக பணிபுரிந்து வருகிறார்,
இந்த நிலையில் செவிலியர் சுஷ்மிதா பணிக்கு சென்று வரும் போதெல்லாம் பின்தொடர்வதை சின்னா வாடிக்கையாக கொண்டுள்ளார். மேலும் சுஷ்மிதாவிடம் சின்னா தனது காதலை சொல்லியுள்ளார். ஆனால் சுஷ்மிதா மறுக்கவே, சின்னா ஒரு தலையாக காதலித்து வந்தார்.
மாத கணக்கில் தன்னுடைய காதல் பற்றி சின்னா கூறியும் சுஷ்மிதா மனம் மாறவில்லை. சின்னாவின் இம்சையை தாங்க முடியாத சுஷ்மிதா காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து சின்னாவை அழைத்து போலீசார் விசாரணை செய்த நிலையில், ஆத்திரமடைந்த சின்னா சுஷ்மிதா வீட்டில் தனியாக இருப்பத அறிந்து, வீட்டினுள் புகுந்து சுண்மிதாவை சரமாரியாக குத்தி கொலை செய்தான்.
சுஷ்மிதாகவின் கதறலை கேட்ட அக்கம்பக்கத்தினர் திண்டதால், வெளியே வந்த சின்னா ஊர்மக்களிடம் இருந்து தப்பிக்க தனது கழுத்தை லேசாக அறுத்து உயிருக்கு போராடுவது போல கீழே படுத்து அலறி நடித்தான்.
தற்கொலை முயற்சி நாடகம் ஆடுவதை அறிந்த ஊர் மக்கள் சின்னா மீது கற்கனை வீசியும் அடித்தும் கொலை செய்தனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று இரண்டு பேரின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.