இத்தாலியின் கண்ணுக்கு தெரியாத சிலையை வடிவமைத்து அதை ரூ13 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார். கண்ணிற்கே தெரியாத சிலை புகைப்படத்திலும் தெரியவில்லை
இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் சால்வாட்டோரே குரவ், இவர் சிற்பகலை வல்லுநராக இருந்து வருகிறார். இவர் வடிக்கும் சிற்பங்கள் ஏலத்து வரும் அதை பலர் போட்டிப்போட்டு வாங்குவார்கள்.
இந்நிலையில் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு “ஐ சோனா”(I am) என்ற தலைப்பில் ஒரு சிலையை வடிவமைத்திருப்பதாக சொல்லி ஏலம் அறிவித்தார். இத்தாலியின் ஏல நிறுவனமான ஆர்ட் – ரைட் நிறுவனம் சார்பில் இந்த ஏலம் அறிவிக்கப்பட்டது. அவர் வடிவமைத்த சிலையை ஏலம் எடுக்கவந்தவர்கள் அதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தனர். பொதுவாக ஏலத்திற்கு வரும் சிலை ஒரு கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டு காட்சிபடுத்தப்படும். தற்போது ஏலத்திற்கு வந்த சிலையை காட்சிபடுத்தியதில் கண்ணாடி பெட்டி மட்டுமே இருந்தது சிலையை காணவில்லை.
பின்னர் அவர்கள் அந்த சிலை குறித்த விவரிப்பை படித்த போது தான் புரிந்தது. இந்த சிலையை விடிவமைத்தவர் இது கண்ணிற்கு புலப்படாத சிலை என இதை விவரித்துள்ளனார். இதை “இம்மெட்டிரியல்” எனவும் எதுவுமே இல்லாததை கொண்டு வடிவமைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?
இந்த சிலை ஏலத்திற்கு வரும் போது 7 ஆயிரம் அமெரிக்க டாலர் முதல் 11 ஆயிரம் அமெரிக்க டாலர் என்ற மதிப்பில் விற்பனைக்கு வந்தது. இறுதியாக 18300 அமெரிக்க டாலருக்கு ஏலத்திற்கு போனது அதன் இந்திய மதிப்பு அதன் இந்திய மதிப்பு சுமார் ரூ 13.38 லட்சமாகும். இதை வாங்கியவர் யார் என்பது தெரியவில்லை. ஆனால் வாங்கியவருக்கு அவர் சிலையை வாங்கியதற்காக சான்றிதழையும் வழங்கியுள்ளார்.
இந்த கண்ணிற்கு தெரியாத சிற்பம் குறித்து குரவ் கூறும் போது : “வெற்று இடம் சக்திகளால் நிறைந்திருக்கும். அந்த சக்திகளை பார்ட்டிக்கள்ளாக உருமாற்றி அதை வைத்து சிற்பம் வடித்துள்ளோம்” எனக்கூறினா்.
குரவ்விற்கு கண்ணிற்கு தெரியாத சிலைய விற்பனை செய்வது இது முதன் முறை அல்ல கடந்த பிப்ரவரி மாதம் இவர் Buddha In Contemplation என்ற பெயரில் கண்ணிற்கு தெரியாத சிலையை விற்பனை செய்துள்ளார்.