வடமாகாணத்தில் இன்று 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, பல்கலைகழக ஆய்வுகூடங்களில் 759 பேரின் பிசிஆர் மாதிரிகள் இன்று சோதனையிடப்பட்டன.
இதில், யாழ் மாவட்டத்தில், தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேர், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர், யாழ் போதனா வைத்தியசாலையில் 5 பேர், தெல்லிப்பழை வைத்தியசாலையில் ஒருவர், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேர், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேர், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 20 பேர், வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர் என, 55 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில், பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேர், கிளிநொச்சி வைத்தியசாலையில் 7 பேர், கிளிநொச்சி தொற்று நோயியல் வைத்தியசாலையில் ஒருவர் என 12 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
மன்னார் மாவட்டத்தில், நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
வவுனியா மாவட்டத்தில், புளியங்குளம் வைத்தியசாலையில் ஒருவர், வவுனியா வைத்தியசாலையில் ஒருவர் என இருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில், முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர், முல்லைத்தீவு வைத்தியசாலையில் ஒருவர் என 4 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் 2 பேர், இரணைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் 2 பேர் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.