26 C
Jaffna
January 8, 2025
Pagetamil
இந்தியா

மணமேடையில் மாரடைப்பினால் இறந்த மணப்பெண்: அந்த இடத்திலேயே தங்கைக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!

திருமணத்தின்போது மாரடைப்பினால் மணப்பெண் இறந்ததை அடுத்து, நல்லநேரத்தில் திருமணம் நடைபெற வேண்டும் என்பதற்காக மணப்பெண்ணின் தங்கையை குறிப்பிட்ட மணமகனுக்கு திருமணம் செய்துவைத்த சம்பவம் ஒன்று உத்தரப்பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

உத்தரபிரதேசம் எட்டவா என்ற இடத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் திருமண நாளன்று, மாலை மாற்றிய கையோடு மணப்பெண் மணமேடையில் மாரடைப்பினால் விழுந்திருக்கிறார். மருத்துவர்கள் உடனடியாக அழைக்கப்பட்டபோதும் மணமகளை காப்பாற்ற முடியவில்லை.

இதனையடுத்து, என்ன செய்வது என்று இரு வீட்டாரும் கலந்து ஆலோசித்தபோது, நல்ல நேரத்தை தவறவிடக்கூடாது என்பதாலும் இரண்டு குடும்பங்களுக்கு இடையிலும் ஆரம்பித்துவிட்ட உறவு அறுந்துவிடக்கூடாது என்ற காரணத்தினாலும் மணமகளின் தங்கையை குறிப்பிட்ட மணமகனுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு பெரியோர்கள் முடிவெடுத்தனர்.

இறந்த பெண்ணின் சடலத்தை திருமண வீட்டில் இன்னொரு அறையில் வைத்துவிட்டு, அவரது தங்கையை உடனடியாக தயார்செய்து திருமணம் நடைபெற்று முடிந்திருக்கிறது.

இது தொடர்பாக பெண் வீட்டார் கருத்து தெரிவித்தபோது – “உண்மையிலேயே கஷ்டமான முடிவாகத்தானிருந்தது. ஆனால், முறை பிசகிவிடக்கூடாது என்பதற்காக பெண்ணின் சடலத்தை ஒரே வீட்டில்வைத்துக்கொண்டு, திருமணத்தையும் முடித்து வைக்க வேண்டியதாயிற்று” என்று கூறியுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
2
+1
0
+1
2

இதையும் படியுங்கள்

போதைப் பொருள் கடத்தல் வழக்கு: நடிகர் மன்சூர் அலிகான் மகனுக்கு நிபந்தனை ஜாமீன்

Pagetamil

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு மீண்டும் நோட்டீஸ்

Pagetamil

தமிழகத்தில் வாக்காளர் அதிகரிப்பு

Pagetamil

ஆளுநர் வெளிநடப்பு முதல் குரல் வாக்கெடுப்பு தீர்மானம் வரை: தமிழக சட்டப் பேரவைச் சர்ச்சை!

Pagetamil

இந்திய இராணுவ வீரர்கள் இறப்பு

east tamil

Leave a Comment