25.1 C
Jaffna
January 13, 2025
Pagetamil
இலங்கை

வடக்கில் இன்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் விபரம்!

வடமாகாணத்தில் இன்று 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, பல்கலைகழக ஆய்வுகூடங்களில் 759 பேரின் பிசிஆர் மாதிரிகள் இன்று சோதனையிடப்பட்டன.

இதில், யாழ் மாவட்டத்தில், தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேர், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர், யாழ் போதனா வைத்தியசாலையில் 5 பேர், தெல்லிப்பழை வைத்தியசாலையில் ஒருவர், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேர், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேர், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 20 பேர், வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர் என, 55 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில், பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேர், கிளிநொச்சி வைத்தியசாலையில் 7 பேர், கிளிநொச்சி தொற்று நோயியல் வைத்தியசாலையில் ஒருவர் என 12 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

மன்னார் மாவட்டத்தில், நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

வவுனியா மாவட்டத்தில், புளியங்குளம் வைத்தியசாலையில் ஒருவர், வவுனியா வைத்தியசாலையில் ஒருவர் என இருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில், முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர்,  முல்லைத்தீவு வைத்தியசாலையில் ஒருவர் என 4 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் 2 பேர், இரணைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் 2 பேர் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சிறிதரன் எம்பிக்கு விமான நிலையத்தில் ஏற்பட்ட அநியாயம் – தமிழரசுக் கட்சியின் கடும் கண்டனம்

east tamil

சிறைச்சாலை பேருந்தின் அடியில் 6 கி.மீ தொங்கிக் கொண்டு பயணித்து தப்பித்த கடாபி 15 வருடங்களின் பின் கைது!

Pagetamil

தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்ற விருந்து – சிக்கிய 10 பேர் கைது

east tamil

மன்னார் வளைகுடாவில் கைது செய்யப்பட்ட 8 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

east tamil

நடுவீதியில் வைத்து மாணவியை கடத்திச் சென்ற மச்சான்!

Pagetamil

Leave a Comment