28.2 C
Jaffna
April 25, 2024
முக்கியச் செய்திகள்

சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 130,837 பேர் பாதிப்பு!

சீரற்ற வானிலை காரணமாக ஆறு மாவட்டங்களில் வசிக்கும் 130,837 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்னபுரி, குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிவ் வசிப்பவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.

கம்பஹாவில் அதிகபட்சமாக 98,052 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,119 குடும்பங்கள் தற்காலிக தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், பலத்த மழை, கடுமையான காற்று மற்றும் வெள்ளம் காரணமாக 341 வீடுகள் சேதமடைந்துள்ளன.

இயற்கை அனர்த்தத்தினால் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்னொருவர் காணாமல் போயுள்ளார்.

இதற்கிடையில், நேற்று முதல் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக மின் இணைப்புக்களின் மீது மரங்கள் விழுந்ததால் நாடு முழுவதும் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறான சுமார் 2,300 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுமார் 44,000 நுகர்வோர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தமிழ் அரசு கட்சி வழக்கு மே 31 வரை ஒத்திவைப்பு: நீதிமன்றத்துக்குள் பல்டியடித்த சுமந்திரன் அணியினர்; மற்றொருவருக்கு பிடியாணை!

Pagetamil

உமா ஓயா திட்டம் திறந்து வைக்கப்பட்டது!

Pagetamil

போதை ஊசி ஏற்றப்பட்டு 10 பேரால் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டாரா யாழ் இளம்பெண்?

Pagetamil

மாலைதீவு நாடாளுமன்ற தேர்தலிலும் சீன ஆதரவு தரப்பு அமோக வெற்றி!

Pagetamil

2 வருடங்களில் இலங்கையிலிருந்து வெளியேறிய 25.5 இலட்சம் பேர்: அதிர்ச்சித் தகவல்!

Pagetamil

Leave a Comment