26.3 C
Jaffna
January 15, 2025
Pagetamil
ஆன்மிகம்

ஷீரடி சாய் பாபாவின் அற்புதங்கள்…

மனித வாழ்க்கையில் கஷ்டங்களும் பிரச்சினைகளும் இருந்து கொண்டுதான் இருக்கும். ஆனால் நாம் அதில் மூழ்கிவிடாமல் இருக்க கடவுளின் அருள் அவசியமாகிறது. கஷ்டங்களைப்போக்க எளிய வழி மகான்களை வணங்குவது. அப்படிப்பட்ட அற்புதமான மகான் சாய் பாபா.

சாய் செய்த அற்புதம்:

நானா சாஹேப் பாபாவின் மிகப்பெரிய பக்தர்; ஒருமுறை அவருக்கு முதுகுப்புறம் உண்டான கட்டியின் காரணமாக அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என்று மருத்துவர் தெரிவித்தார். சிகிச்சைக்காக அவரும் தன்னை தயார் படுத்திக் கொண்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மறு நாள் அவர் இருக்கும் அறையின் மேல்தளத்தின் ஓடுகள் சரிந்து அதில் ஒரு கூர்மையான ஓடு மட்டும் குப்புறப்படுத்துக் கொண்டிருந்த நானாவின் முதுக்கட்டியின் மீது சரக்கென்று விழுந்து, சிதைத்தது. வழியால் துடித்தார் நானா. மருத்துவர்கள் அதிர்ந்தார்கள்.

கட்டி உடைந்து, ரத்தமும், சீழுமாய் வெளியேறின. மருத்துவர்கள் அவசர அவசரமாய் நானாவை பரிசோதித்தார்கள். என்ன ஆச்சரியம்! அறுவை சிகிச்சையே செய்யவேண்டாம் என்று மருந்த்துவர்கள் கூறினார்கள்.

சில நாட்கள் சென்றன. நானா சாஹேப் பூரண குணமடைந்ததும் பாபாவைக் காணச் சென்றார்.

“வா-வா ..” என்று அவரை அழைத்த சாயிபாபா, தன் ஆட்காட்டி விரலை நானா சாஹேப் முன்னால் நீட்டினார். ஒன்றும் புரியாமல் பார்த்தார் நானா. பாபா புன்னகையுடன்”என்னப்பா, என்னிடம் நீ சொல்லாவிட்டால் எனக்குத் தெரியாதா என்ன? இதோ என் ஆட்காட்டிவிரலால் கூரையிலிருந்து ஓட்டினைத் தள்ளி, உனக்கு சிகிச்சை செய்ததே நான்தான்!” என்று புன்னகைத்தார் ஷிரடி சாயிபாபா. பரவசத்தில் நெகிழ்ந்து மெய் மறந்து நின்றார் நானா சாஹேப்.

உங்களுக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் பாபாவை பிராத்தனை செய்யுங்கள். உடல் ரீதியான பிரச்னைக்கும், மனரீதியான பிரச்னைக்கும் நீங்கள் பிராத்தனை செய்யுங்கள். பாபா உங்களை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார், உங்கள் மேல் அக்கறையுடன்தான் இருக்கிறார் என்பதை மட்டும் நம்புங்கள். உன்மையாக நம்புங்கள். அப்புறம் பாருங்கள், உங்கள் வாழ்வில் நடக்கும் அற்புதங்களை!

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மீனம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

கும்பம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

மகரம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

தனுசு ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

விருச்சிகம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

Leave a Comment