கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகளுக்கு பெரும் பங்கு உள்ளது. பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வைக்க ஊக்குவிப்பதற்கு சில நாடுகளில் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வரிசையில் மெக்சிகோ நாடு ஒரு அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வோருக்காக 10 மில்லியன் டாலர் (73 கோடி ரூபாய்க்கு மேல்) பரிசுகள் அடங்கிய லாட்டரி திட்டத்தை மெக்சிகோ அரசு அறிவித்துள்ளது. இதில் மெகா பரிசு 5 மில்லியன் டாலர் (36.55 கோடி ரூபாய்க்கு மேல்).
Vax to Max என இந்த லாட்டரி திட்டத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இத்திட்டத்தின் கீழ் 5 மில்லியன் டாலர் பரிசு வெல்லத் தகுதியானவர்கள். தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பதிவு செய்துகொண்டு போட்டியிடலாம்.
ஜூன் மாதம் மத்தியில் தொடங்கி 5 வாரங்களுக்கு வெற்றிபெற்ற 4 பேருக்கு 250000 டாலர் பரிசு வழங்கப்படும். பின்னர் ஆகஸ்ட் தொடக்கத்தில் ஒரே நபருக்கு 5 மில்லியன் டாலர் மெகா பரிசு வழங்கப்படும். மெக்சிகோ பெடரல் நிவாரண நிதியில் இருந்து இந்த பணம் வழங்கப்படும்.