“ஓர் அண்ணனை இழந்துவிட்டேன்” இயக்குனரின் பிரிவால் வாடும் கமல்!

Date:

இயக்குனர் ஜிஎன் ரங்கராஜன் மறைவை அடுத்து நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வந்தவர் கமல்ஹாசன். இவர் இயக்கிய பெரும்பாலான படங்களில் கமல் நடித்துள்ளார். மீண்டும் கோகிலா, எல்லாம் இன்பமயம், கல்யாணராமன், கடல் மீன்கள், மகராசன் உள்ளிட்ட கமல் நடித்த படங்களை ரங்கராஜன் இயக்கியுள்ளார். இதுதவிர அடுத்தாத்து ஆல்பர்ட், முத்து எங்கள் சொத்து உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் ரங்கராஜன் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 90. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தற்போது நடிகர் கமல்ஹாசன் ரங்கராஜன் மறைவை அடுத்து இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். Image

“ஜி.என்.ரங்கராஜனுக்கு அஞ்சலி! நான் சினிமாவில் நுழைந்த காலம் தொட்டு இறக்கும் தறுவாய் வரை என் மீது மாறாத பிரியம் கொண்டவர் இயக்குனர் ஜி.என். ரங்கராஜன். கடுமையான உழைப்பால் தமிழ் சினிமாவில் தனக்கென்று தனித்த இடத்தை உருவாக்கிக் கொண்டவர். இன்றும் விரும்பிப் பார்க்கப்படும் பல திரைப்படங்களை தமிழ் ரசிகர்களுக்குத் தந்தார். அவரது நீட்சியாக மகன் ஜி.என்.ஆர். குமரவேலனும் சினிமாவில் தொடர்கிறார். கல்யாணராமன், மீண்டும் கோகிலா, கடல் மீன்கள், எல்லாம் இன்பமயம், மகாராசன் என என்னை வைத்து பல வெற்றிப் படங்களைத் தந்தவர். என் மீது கொண்ட மாறாத அன்பால், தான் கட்டிய வீட்டிற்கு ‘கமல் இல்லம் ‘ என்று பெயர் வைத்தார். இன்று அந்த வீட்டிற்கு சற்றேறக்குறைய 30 வயதாகி இருக்கக் கூடும். ஜி.என்.ஆர் தன் வீட்டில் இல்லையென்றால் ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டில்தான் இருப்பார் என்றே எங்களை அறிந்தவர்கள் சொல்வார்கள். சினிமாவில் மட்டுமல்ல, மக்கள் பணியிலும் என்னை வாழ்த்தியவர். எப்போதும் எங்கும் என் தரப்பாகவே இருந்தவர். சில நாட்களுக்கு முன்பு கூட முகச்சவரம் செய்து பொலிவோடு இருக்க வேண்டும். கமல் பார்த்தால் திட்டுவார் என்று சொல்லி வந்தார் என கேள்வியுற்றேன். தான் ஆரோக்கியமாக இருப்பதையே நான் விரும்புவேன் என்பதை அறிந்தவர். நிபந்தனையற்ற தூய பேரன்பினைப் பொழிந்த ஓர் அண்ணனை இழந்துவிட்டேன். அண்ணி ஜக்குபாய்க்கும் , தம்பி இயக்குனர் ஜி.என்.ஆர். குமரவேலனுக்கும் குடும்பத்தார்க்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வடக்கு கிழக்கில் தமிழ் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது என்றார் இந்திய துணை ஜனாதிபதி: சீ.வீ.கே தகவல்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையைக்...

இயந்திர கோளாறு காரணமாகவே தனியார் பேருந்தில் இருந்து பயணிகள் இறக்கப்பட்டார்களாம்!

பயணிகளை இடைநடுவில் தனியார் பேருந்து இறக்கியதாக சமூக வலைத்தளங்களில் எழுந்த குற்றச்சாட்டுத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்