உங்களுக்கு பாலியல் சீண்டல்கள் நடந்திருந்தால் அதை தைரியமாக வெளிப்படுத்துங்கள் என நடிகை சோனா கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் நடிகை சோனா. இவர் கவர்ச்சியை தாண்டி காமெடியாகவும், குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். அவர் நடிப்பில் வெளியான குசேலன், கோ, குரு என் ஆளு, பரமபதம் விளையாட்டு, சேஸிங் உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
தமிழ், தெலுங்கு, மலையாள உள்ளிட்ட மொழிகளில் படங்களை நடித்துள்ளார். சினிமாவில் வாய்ப்பு குறைந்ததால் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். தற்போது ‘அபி டெய்லர்’ என்ற புதிய சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் சோனாவின் கேரக்டருக்கு நல்ல வரவேற்பு உள்ளதால் அடுத்தடுத்து சீரியலுக்கான வாய்ப்புகள் தேடி வருகிறது.
இந்நிலையில் நடிகைகளுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல்கள் சமீபகாலமாக ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. அந்தவகையில் தனக்கும் சில திரைப்படங்களில் நடிக்கும்போது பாலியல் தொல்லைகள் இருந்ததாக நடிகை சோனா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், தமிழ், மலையாள சினிமாவில் நடித்துள்ளேன். சினிமாதான் எனது அடையாளம். தற்போது நல்ல கதாபாத்திரம் அமைந்துள்ளதால் சீரியலில் நடித்து வருகிறேன். கடந்த சில வருடங்களுக்கு முன்பு சில திரைப்படங்களில் நடிக்கும்போது எனக்கு பாலியல் தொல்லை இருந்தது. உங்களுக்கும் இதுபோன்ற நடந்திருந்தால் அதை வெளிப்படுத்துங்கள். அப்போதுதான் நமக்கான உரிமையை பெறமுடியும். எனக்கு நடந்த அந்த துயரத்தை கடந்து சென்றுவிட்டேன் என்று நடிகை சோனா தெரிவித்துள்ளார்