திருமணத்தன்று மாப்பிள்ளை மணமேடையில் போதையில் இருந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகிறது. இந்த வீடியோ 2019 எடுக்கப்பட்டு அப்பொழுதே வெளியான வீடியோ தற்போது மீண்டும் வைரலாகியுள்ளது.
இன்று சமூகவலைத்தளங்களில் காமெடி வீடியோக்கள் அதிகமாகிவிட்டது. வீடியோக்கள் தெரியாமல் நடந்தது அல்லது வேண்டுமென்றே காமெடியாக இருக்க வேண்டும் என பல விதமான காமெடி வீடியோக்கள் இருக்கின்றன. அவை எல்லாம் பெரும்பாலும் சிறிய சிறிய விஷயங்களை காமெடியாக செய்திருப்பார்கள்.
ஆனால் தற்போது வைராகி வரும் வீடியோ கொஞ்சம் சீரியஸான விஷயம் தான் ஆனால் இந்த வீடியோவை பார்த்துவிட்டு சிரிக்காமல் இருக்க முடியவில்லை. இந்த வீடியோவில் ஒரு தாம்பதிக்கு திருமணம் நடக்கிறது அவர்களது உடையை பார்க்கும் போது இது ட இந்தியாவில நடக்கும் சம்பவம் என தெரிகிறது. அதில் மாப்பிள்ளை போட்டோவிற்கு போஸ் கொடுத்துக்கொண்டே மணப்பெண்ணிற்கு பதிலாக பக்கத்தில் நின்று கொண்டிருந்த பெண்ணிற்கு மாலை போட சென்றார். அவரை அருகில் இருந்தவர்கள் தடுத்து நிறுத்தினர்.
அவர் ஏதோ போட்டாவை பார்த்துக்கொண்டு தான் அப்படி செய்துவிட்டார் என நாம் நினைத்தோம் ஆனால் பின்னர் அவர் தள்ளாடி நிலை விழுந்த போது தான் புரிந்தது மாப்பிள்ளை “பூஸ்ட்”-ல் இருக்கிறார் என்று. பொதுவாக திருமணம் என்பது ஒருவர் வாழ்வில் ஒரு முறை மட்டுமே நடப்பது அப்படியான திருமணம் நடக்கும் போது அனைவரும் அதில் பொறுப்பாக நடந்து கொள்வர். ஆனால் திருமணத்தில் மாப்பிள்ளையே குடி போதையில் இருந்தது பலரை முகம் சுழிக்க வைத்தது. பின்னர் மணப்பெண் அவர் அருகே மாப்பிள்ளை மாலை போட வரும் போது தட்டிவிட்டார். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
தன் எதிர்கால வாழ்க்கை பற்றி கவலைப்படாமல், இப்படி இளைஞர்கள் மதுவில் எவ்வளவு அடிமையாகிவிட்டார்கள் என்பதற்கு இந்த வீடியோவே சாட்சி.இந்த சம்பவம் நடந்தது 2019ம் ஆண்டு, அப்பொழுதே இந்த வீடியோ வெளியாகி வைரலாக பரவியது. இருந்தாலும் தற்போது மீண்டும் இந்த வீடியோ வைரலாகியுள்ளது.