29.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
இலங்கை

சங்கானையில் நேற்று தடுப்பூசி ஏற்றப்படாதது ஏன்?

யாழ். மாவட்டத்தில் உள்ள 14 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் ஏனைய 13 பிரிவுகளிலும் நேற்று (01) பொதுமக்களுக்கான கொவிட்-19 தடுப்பூசிகள் ஏற்றப்பட்ட போதிலும் சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஏன் ஏற்றப்படவில்லை என இப்பிரதேசத்தில் உள்ள சமூக செயற்பாட்டாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஏனைய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகள் ஓரளவுக்கேனும் பொதுமக்களுக்கு தடுப்பூசிகளை ஏற்றியிருக்கின்ற போதிலும், 50,000 வரையான சனத்தொகையைக் கொண்ட வலி.மேற்கு பிரதேசத்தில் இதுவரை 500 வரையான பொதுமக்களுக்குக்கூட தடுப்பூசி ஏற்றப்படவில்லை எனவும் மேற்படி சமூக செயற்பாட்டாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தடுப்பூசி ஏற்றும் செயற்பாட்டைக் கைவிட்டு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுடன் சுகாதார வைத்திய அதிகாரியும் சேர்ந்து பி.சி.ஆர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர் எனவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் மக்களை பலியெடுத்துக்கொண்டிருக்கும் கொடிய கொரோனா நோய்க்கு பல இலட்சக்கணக்கான மக்கள் பலியாகியிருக்கின்றனர். ஒரு தடுப்பூசி கிடைக்காதா என மக்கள் ஏங்கிக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் கிடைத்த தடுப்பூசிகளைப் பெற்று பொதுமக்களுக்கு ஏற்றுவதில் சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஏன் ஆர்வம் காட்டவில்லை எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

04 பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், 11 குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள், ஒரு மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர், ஒரு மேற்பார்வை குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள் அதைவிட பணியாளர்கள், சங்கானை, வட்டுக்கோட்டை, பாணாவெட்டி போன்ற வைத்தியசாலை ஆளணியினர் என ஓரளவுக்கேனும் ஆளணியைக்கொண்டு இயங்கும் சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை 500 வரையான பொதுமக்களுக்கு கூட இதுவரை தடுப்பூசிகளை ஏற்றியிருக்கவில்லை.

எனினும், குறைந்த ஆளணியுடன் இயங்கும் காரைநகர், ஊர்காவற்றுறை உள்ளிட்ட சில சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் கூடிய அடைவ மட்டத்தைக் காட்டியிருக்கின்றனர். ஆனால், 30 வயதிற்கு மேற்பட்ட, ஏறக்குறைய 32 ஆயிரத்திற்கு அதிகமானோருக்கு தடுப்பூசி ஏற்றக்கூடிய சந்தர்ப்பம் இருந்தும் இதுவரை அது ஏன் சாத்தியப்படுத்தப்படவில்லை எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

தடுப்பூசி ஏற்றும் பணி இன்னும் இரு தினங்களில் முடிவடையவுள்ள நிலையில், சுழிபுரம் மத்தி மற்றும் பனிப்புலம் ஆகிய இரு இடங்களில் மாத்திரமே தடுப்பூசி ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

எனினும், இரு தினங்களிலாவது வலி.மேற்கு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை ஆகியவற்றின் ஆளணி உதவியைப் பெற்று பல இடங்களில் தடுப்பூசி ஏற்றும் செயற்பாட்டை முன்னெடுப்பதன் மூலம் சில ஆயிரம் வரையான மக்களுக்கேனும் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ள முடியும் எனவும் சமூக செயற்பாட்டாளர்கள் ஆலோசனை முன்வைத்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரணிலை திருடன் என்ற நீதியமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும்: ஜீவன் தொண்டமான் வலியுறுத்தல்

Pagetamil

யாழில் சங்கிலி அறுத்தவர் கைது!

Pagetamil

யாழில் புள்ளிங்கோக்களை மாணவர்களாக மாற்றிய அதிபர்

Pagetamil

வடக்கு கிழக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயவங்கள் – 20 பேர் இந்தியா பயணம்

Pagetamil

பாடசாலை மாணவர்கள், சீசன் டிக்கெட்காரர்களை ஏற்றாத இ.போ.ச பேருந்துகளா?: 1958 இற்கு அழையுங்கள்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!