உருமாறிய வைரஸ்களிற்கு புதிய பெயரிட்டது உலக சுகாதார அமைப்பு!

Date:

உருமாறிய வைரஸ்களிற்கு உலக சுகாதார அமைப்பு புதிய பெயர்களை அறிவித்துள்ளது.

இதன்படி இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய பி.1.617.1 வகை வைரஸுக்கு “கப்பா” (Kappa) என்றும், 2வதாக கண்டறியப்பட்ட பி.1.617.2 வைரஸுக்கு “டெல்டா” (Delta) என்றும் உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.

பி.1.617.2 உருமாறிய கொரோனா வைரஸை இந்தியாவில் உருவான கொரோனா வைரஸ் என்று ஊடகங்கள் அழைக்கவும், பிற நாடுகள் அழைக்கவும் மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.

உலக சுகாதார அமைப்பு அவ்வாறு குறிப்பிடாதபோது இந்தியாவின் பெயரை வைரஸுடன் சேர்த்து குறிப்பிடுவது சரியல்ல, ஆதாரமற்ற வகையில் அவ்வாறு அழைக்கக் கூடாது என்று கண்டித்தது. மேலும், இந்தியாவின் பெயரை வைரஸுடன் சேர்த்து அழைப்பதை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசு, உலக சுகாதார அமைப்பிடம் கேட்டுக்கொண்டது.

இதையடுத்து, உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் மருத்துவர் மரியா வான் கெர்கோவ் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “உருமாறிய கொரோனா வைரஸை எளிதாகக் கண்டறியும் வகையில், அடையாளப்படுத்தும் வகையில் உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. ஆனால், அதன் அறிவியல் பூர்வமான பெயர் மாறவில்லை. பொதுத் தளத்தில் விவாதிக்கவும், அடையாளப்படுத்தவும் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன்படி பி.1.617.1 வகை வைரஸுக்கு ‘கப்பா’ என்றும் பி.1.617.2 வகை வைரஸுக்கு ‘டெல்டா’ என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இந்த இரு வைரஸ்களும் முதன்முதலில் இந்தியாவில் தோன்றியவை” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், உருமாறிய வைரஸ் ஒன்றையும் கிரேக்க எழுத்துகளான அல்ஃபா, பீட்டா, காமா ஆகிய வடிவத்தில் குறிப்பிடும்போது எளிதாக அடையாளப்படுத்தவும் முடியும், அதைக் குறிப்பிட்டுப் பேசவும் முடியும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதன்படி பிரிட்டனில் முதன் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் பி.1.1.7 வைரஸை “அல்ஃபா” என்றும், தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட பி.1.351 வைரஸுக்கு ”பீட்டா” என்றும், பிரேசிலில் கண்டறியப்பட்ட வைரஸுக்கு “காமா” என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

பலாலியில் 17ஆவது வாரமாகத் தொடரும் காணி விடுவிப்புப் போராட்டம்

பலாலி மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்...

இலங்கைக் கடற்பரப்பில் தவிக்கும் ஈரானியக் கப்பல்களுக்கு உடனடியாக நேசக்கரம் நீட்டுக!

வளைகுடா நாடுகளில் நிலவும் தொடர்ச்சியான அதிகாரப் போராட்டங்கள் மற்றும் மோதல் நிலைகள்...

களுத்துறை நாகொடை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் வாழைச்சேனையில் கைது!

களுத்துறை நாகொடை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்