28.9 C
Jaffna
April 14, 2025
Pagetamil
உலகம்

ஆஸ்திரியா உள்பட 8 நாடுகளுடன் சர்வதேச விமான சேவையை மீண்டும் இயக்க ரஷ்யா முடிவு!

ஆஸ்திரியா உள்பட 8 நாடுகளுடன் வரும் 10ம் திகதி முதல் குறிப்பிட்ட அளவில் சர்வதேச விமான சேவையை மீண்டும் இயக்க ரஷ்யா முடிவு செய்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரசின் அச்சுறுத்தல் நீடித்து வரும் நிலையில், பல்வேறு நாடுகளும் சர்வதேச விமான போக்குவரத்து சேவையை நிறுத்தி வைத்தன. இதில் ரஷ்யாவும் ஒன்று. இந்நிலையில், ரஷ்ய அரசு வரும் 10ம் திகதி முதல் ஆஸ்திரியா, ஹங்கேரி, லெபனான், லக்சம்பர்க், மொரீசியஸ், மொராக்கோ, குரோசியா மற்றும் அல்பேனியா ஆகிய 8 நாடுகளுடனான சர்வதேச விமான சேவையை குறிப்பிட்ட அளவில் மீண்டும் இயக்குவது என முடிவு செய்துள்ளது.

இதன்படி, ஆஸ்திரியாவின் வியன்னா-மாஸ்கோ செல்லும் விமானம், ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட்-மாஸ்கோ செல்லும் விமானம், மொரீசியஸ் நாட்டின் போர்ட் லூயிஸ்-மாஸ்கோ செல்லும் விமானம், மொராக்கோ நாட்டின் ரபாத்-மாஸ்கோ செல்லும் விமானம், குரோசியா நாட்டின் ஜக்ரெப்-மாஸ்கோ செல்லும் விமானம் ஆகியவை வாரம் இரு முறை என்ற அடிப்படையில் இயக்கப்பட உள்ளன.

இதேபோன்று, லெபனான் நாட்டின் பெய்ரூட்-மாஸ்கோ செல்லும் விமானம், லக்சம்பர்க் நாட்டின் லக்சம்பர்க்-மாஸ்கோ செல்லும் விமானம் ஆகியவை வாரம் ஒரு முறை என்ற அடிப்படையில் இயக்கப்பட உள்ளன.

அல்பேனியா நாட்டின் திரானா-மாஸ்கோ செல்லும் சார்ட்டர்டு விமானங்களும் வாரம் ஒரு முறை என்ற அடிப்படையில் இயக்கப்பட உள்ளன.

இதையும் படியுங்கள்

மனிதக் கேடயமாக பயன்படுத்தப்பட்ட பொதுமக்களே கொல்லப்பட்டனர்

Pagetamil

ஈரானுடான இராஜதந்திர முயற்சி தோல்வியடைந்தால் இராணுவம் பயன்படுத்தப்படும்!

Pagetamil

ஈரான்-அமெரிக்கா அணுசக்தி பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கும் அப்பாஸ் அரக்சி யார்?

Pagetamil

உக்ரைனில் கைப்பற்றிய பகுதிகளின் உரிமையை ரஷ்யாவிற்கு விட்டுக்கொடுப்பதே போர் நிறுத்தத்திற்கு சிறந்த வழி!

Pagetamil

வரிப் போர்: ஹாலிவுட் படங்களை குறி வைக்கும் சீனா!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!