ஒருவரின் ஜாதகத்தில் ராகு கேது எனும் நிழல் கிரகங்களின் குறைபாடு இருப்பின் அதனால் பல தொந்தரவுகளை அந்த ஜாதகத்தை சேர்ந்தவர் அனுபவிப்பார். அப்படிப்பட்ட பிரச்சினைகளிலிருந்து விடுபட செய்ய வேண்டிய எளிய ஜோதிட பரிகாரம் என்ன என்பதை பார்ப்போம்.
குறிப்பாக ராகு-கேதுவின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளிலிருந்து தான, தர்மங்கள் நல்ல விமோசனம் தரும் என்பது நிதர்சனம்.
செய்ய வேண்டிய எளிய தானம்
ஒருவர் ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், அதற்கான எளிய பரிகாரம் தான, தர்மம் தான். முடிந்தால் தேயிலை, தூபக் குச்சிகள், கருப்பு – வெள்ளை போர்வைகள் மற்றும் சீயக்காய் தானமாக வழங்கலாம்.
இல்லையெனில் வறியவருக்குத் தேநீர் வாங்கி தரலாம். போர்வைகள் வாங்கி தரலாம். மேலும் பார்வையற்ற மற்றும் தொழுநோயாளிகளுக்கும், உடல் குறைபாடு உள்ளவர்களுக்கு முடிந்தவரை உதவுங்கள்.
மந்திரத்தை உச்சரிக்கவும்
ராகுவினால் ஏற்படும் பிரச்னைகள் நீங்கள் சனிக்கிழமைகளில் தானம் செய்யுங்கள். சனிக்கிழமைகளில் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு நீங்கள் தரும் தான பொருட்களை வழங்கலாம். தானம் கொடுக்கும் போது ‘ஓம் ராகுவே நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே கொடுக்கவும்.
ராகு காயத்ரி மந்திரம்
ஓம் நாகத்வஜாய வித்மஹே
பத்ம ஹஸ்தாய தீமஹி
தந்நோ ராகு ப்ரசோதயாத்
ராகுவுக்குரிய இந்த மந்திரத்தை தினமும் 11, 21 அல்லது 51 முறை உச்சரிக்கவும்.
சனிக்கிழமைகளில் 108 முயலவும்.
கேதுவின் நற்பலன் பெற :
கேது பகவானின் அருளைப் பெற்றிட கருப்பு மற்றும் வெள்ளை ஆடைகள் அல்லது போர்வையை வறியவர்களுக்குத் தானமாக வழங்கிடவும்.நெல்லிக்காய் ஊறுகாய், மாங்காய் ஊறுகாய், நெல்லிக்காய், எலுமிச்சை போன்றவற்றை நன்கொடையாக வழங்கலாம். நாய்க்கு ரொட்டி துண்டுகளை சாப்பிட கொடுக்கலாம்.
இந்த நாள் கேதுவுக்கு சிறப்பு நன்கொடைகளை வழங்குங்கள்
கேது பகவான் மோசமான நிலையில் இருந்தால், செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் கேதுவுக்குரிய உணவு அல்லது பொருட்களை தானம் செய்யலாம். தானம் கொடுக்கும் பொருட்களை இரவு 7 மணிக்கு பிறகு வழங்கலாம்.
கேது காயத்ரி மந்திரம்
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ கேதுப் ப்ரசோதயாத்
கேதுவுக்குரிய இந்த மந்திரத்தை உங்கள் விருப்பப்படி 11, 21,51 அல்லது மீண்டும் 108 முறை உச்சரிக்கலாம். இதைச் செய்வதன் மூலம் கேதுவின் குறைபாடுகள் நீங்கும் என்று நம்பப்படுகிறது.