மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொடர்புடைய நடவடிக்கைகளில் இருந்து நாளை முதல் விலகியிருப்ப்பதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் இன்று அறிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு பிரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி தொற்றுக்குள்ளாவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, பொதுச்சுகாதார பரிசோதகர் ஒருவரை தொடர்பு கொண்ட ஒருவர் மோசமான வார்த்தைகளால் பேசியிருந்தார்.
தன்னை ஆடைத் தாழிற்சாலை ஊழியர் என அடையாளப்படுத்திய அந்த நபரின் தொலைபேசி உரையாடல் சமூக ஊடகங்களில் கசிந்திருந்தது.
அவரது தொலைபேசி இலக்கத்தையும், அடையாளத்தையும் பொலிசாரிடம், பொதுச்சுகாதார பரிசோதகர்கள் வழங்கியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என குறிப்பிட்டு நாளை முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இருந்து பொதுச்சுகாதார பரிசோதகர்கள் ஒதுங்கியிருக்க தீர்மானித்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1