தமிழின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகிறார் ஏ.எல்.விஜய். இவர் பிரபல தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மகன் ஆவார். அஜித்தின் ‘கீரிடம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். அதன்பிறகு விக்ரமை வைத்து ‘தெய்வதிருமகள்’ படத்தை இயக்கி அனைவரின் பாராட்டை பெற்றார். இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த அமலாவுடன் ஏ.எல். விஜய்க்கு காதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது.
பின்னர் அதை உறுதிப்படுத்தும் விதமாக ‘தலைவா’ படத்திலும் நடிகர் விஜய்க்கு ஜோடியாக அமலா பால் நடித்திருந்தார். இதையடுத்து ஏ.எல்.விஜய், அமலா பாலை திருமணம் செய்துக்கொண்டார். மூன்று ஆண்டுகள் இணைந்து வாழ்ந்து வந்த இவர்கள், கருத்து வேறுப்பாட்டால் கடந்த 2017ம் ஆண்டு பிரிந்துவிட்டனர்.
தற்போது கங்கனாவை வைத்து ‘தலைவி’ படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இதற்கிடையே பெற்றோரின் விருப்பப்படி கடந்த 2019ம் ஆண்டு மருத்துவர் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துக்கொண்டார். ஏ.எல்.விஜய் – ஐஸ்வர்யா தம்பதிக்கு துருவா என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இயக்குனர் ஏ.எல்.விஜய் தனது மகன் துருவாவின் முதல் பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். கொரானா ஊரடங்கு அமலில் உள்ளதால் வீட்டில் எளிமையாக இந்த பிறந்தநாள் நடைபெற்றுள்ளது. ஏ.எல்.விஜய்யின் மகனின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

