கொழும்பு சீதுவையில் இருந்து மட்டக்களப்பிற்கு கொள்கலன் ஒன்றில் விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்ட 9240 மதுபான போத்தல்களை வாழைச்சேனை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
ரிதிதென்ன சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிசாரு ஏற்பட்ட சந்தேகத்தினை அடுத்து கொல்கலன் ஏற்றி வந்த லொறியினை சோதனையிட்டனர்.
அந்த லொறியினுள் மதுபான போத்தல்கள் காணப்பட்டுள்ளன.
இதன் பெறுமதி சுமார் ஒரு கோடி 70 இலட்சம் ரூபா என தெரிவிக்கப்படுகிறது.
பாரவூர்தியின் சாரதி மற்றும் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லொறி வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் சீல் வைக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பாதுகாப்பு பயணக் கட்டுப்பாடு அமுல் செய்யப்பட்ட நிலையில் மதுபானக் கடைகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன. இந் நிலையில் சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்கென இந்த மதுபானம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிசார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.