சஹ்ரான் ஹாஷிம் குழு தப்பிச் சென்ற போது அடைக்கலம் கொடுத்த விவாகப் பதிவாளர் கைது!

Date:

சஹ்ரான் ஹாஷிம் உட்பட ஐந்து பேருக்கு பாதுகாப்பு அளித்த குற்றச்சாட்டில் விவாகப் பதிவாளர் ஒருவர் ஒலுவில் பகுதியில் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

2017 இல் காத்தான்குடியில் உள்ள அலியார் பகுதியில் சஹ்ரான் உள்ளிட்ட 5 பேர், தமக்கு எதிரான கருத்துடைய மதக் கொள்கையுடைய ஒரு குழுவுடன் மோதிக்கொண்டார். அநத மோதலை தொடர்ந்து, சஹ்ரான் உட்பட ஐந்து பேரும் அப்பகுதியிலிருந்து தப்பி ஓலுவில் பகுதிக்கு சென்று, தற்போது கைதாகியுள்ள விவாகப் பதிவாளரின் வீட்டில் பதுங்கி இருந்ததாக அவர் கூறினார்.

சஹ்ரான் உள்ளிட்ட ஐந்து சந்தேக நபர்களுக்கும் தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்து, அவர் தீவிரவாதத்திற்கு ஆதரவாக இருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

திருமண பதிவாளர் வீட்டில் பதுங்கி இருந்த ஐந்து சந்தேக நபர்களில் இருவர் மௌலவிகள். அவர்கள் தற்போது, பயங்கரவாத விசாரணை பிரிவினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். ஏனைய மூவரும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்ட சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட விவாகப் பதிவாளர் மட்டக்களப்பு பயங்கரவாத பிரிவில் வைக்கப்பட்டு கொழும்புக்கு கொண்டு வரப்பட உள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட மூலத்தை எதிர்த்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில்  பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தை தேசிய மக்கள் சக்தி...

ஒரே கிளிக்கில் பரீட்சைத் தரவுகள்: தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய டிஜிட்டல் முயற்சி

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் (CEDPL)...

தமிழ் தேசம் ஜோதிலிங்கம் ஐயாவை இழந்துவிட்டது: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆழ்ந்த இரங்கல்

ஆசிரியர், வழக்கறிஞர், அரசியல் ஆய்வாளர் என்ற எல்லைகளைத் தாண்டித் தமிழ் தேசத்தின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்