25.4 C
Jaffna
December 29, 2024
Pagetamil
உலகம்

அமெரிக்காவில் கொடூர துப்பாக்கிச்சூடு ; இருவர் பரிதாபமாக பலி!

அமெரிக்காவில் ஃப்ளோரிடா மாகாணத்தில் மியாமியில் நடைபெற்ற கச்சேரியில் ஒரு கும்பல் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் பரிதாபமாக பலியாகிவிட்டனர். மேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாக மியாமி போலீசார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலையில் மியாமி கார்டன்ஸ் அருகே உள்ள ஒரு எஸ்டேட்டின் பில்லியர்ட்ஸ் ஹாலில் இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. அவ்விடத்தில் கச்சேரி நடைபெற்றது. வெளியே சிலர் நின்றுகொண்டிருந்தனர்.

அப்போது திடீரென காரில் வந்த மூன்று பேர் அடங்கிய கும்பல் திடீரென துப்பாக்கியை எடுத்து கூட்டத்தை நோக்கி பாரபட்சமின்றி சுட்டுத் தள்ளியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மூன்று பேரும் காரில் ஏறி தப்பியோடிவிட்டனர்.

உடனடியாக பாதிக்கப்பட்ட இடத்துக்கு சென்று பார்த்தபோது இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். மேலும் 20 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொலைகாரர்களுக்கு காவல்துறை இயக்குநர் அல்பிரெடோ ரமிரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் துப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்டு 43,000 பேர் அமெரிக்காவில் இறந்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அஜர்பைஜான் பயணிகள் விபத்துக்கு ரஷ்ய ஏவுகணை காரணமா?

Pagetamil

ஆப்கானிஸ்தானுக்குள் திடீர் வான் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்

Pagetamil

பறவை மோதியதால் விபரீதமா?: பயணிகள் விமானம் விபத்து; ஏராளமானவர்கள் பலி!

Pagetamil

ஜனாதிபதியாக இருந்தால்தான் கணவன்: சிரியாவிலிருந்து தப்பியோடிய ஆசாத்திடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி!

Pagetamil

உகண்டாவை உலுக்கும் டிங்கா டிங்கா வைரஸ்: இந்த வைரஸ் தொற்றினால் தொடர்ந்து நடனமாடிக் கொண்டேயிருப்பீர்கள்!

Pagetamil

Leave a Comment