மணிமேகலை கொரோனா லொக்டவுனில் கிராமத்திற்கு சென்று அங்கு மாடு மேய்த்து இருக்கிறார்.
குக் வித் கோமாளி மணிமேகலை தற்போது லாக்டவுன் நேரத்தில் கிராமத்திற்கு தான் சென்று இருந்து வருகிறார். அங்கு என்னவெல்லாம் செய்து கொண்டிருகிறார்கள் என்பதை வீடியோவாக வெளியிட்டு உள்ளார் அவர்.
ஒரு காலத்தில் மணிமேகலை நிகழ்ச்சி தொகுப்பாளராக சன் ம்யூசிக்கில் முன்னணியில் இருந்தவர் மணிமேகலை. திருமணத்திற்குப் பிறகு மணிமேகலை ஸ்டார் விஜய் டிவிக்கு மாறினார்.
விஜய் டிவியில் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அவர் குக்கு வித் கோமாளி என்ற ஷோ தொடங்கிய பிறகு அதில் கோமாளியாக பங்கேற்று காமெடியனாகவும் வலம் வர தொடங்கினார். குக் வித் கோமாளி இரண்டு சீசன்கள் முடிவு பெற்றிருக்கும் நிலையில் மணிமேகலைக்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. தொகுப்பாளராக வந்த மணிமேகளை தற்போது காமெடியனாக மாறிவிட்டார்.
கணவருடன் சேர்ந்து சொந்தமாக யூடியூப் சேனல் தொடங்கி தற்போது நடத்தி வருகிறார் மணிமேகலை. அதில் அவரது பர்சனல் வீடியோக்கள், சமையல் வீடியோக்கள், கணவருடன் இருக்கும் வீடியோக்கள் ஆகியவற்றை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. Hussain Manimegalai என்ற அவர்களது சேனல் 1.1 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை பெற்று உள்ளது.
கடந்த வருடம் மணிமேகலை அவரது கணவர் உடன் கிராமத்தில் தான் இருந்தார். அங்கு எடுத்த பல வீடியோக்களை அவர் youtube ல் வெளியிட்டு வந்தார். இந்நிலையில் இந்த வருடமும் மணிமேகலை ஹுசைன் உடன் கிராமத்தில் தான் தங்கி இருக்கிறார்.
ஆனால் முதலில் கவனித்தது போல தற்போது அவரது உறவினர்கள் கவனிப்பதில்லையாம். லாக்டவுனில் என்னவெல்லாம் செய்து கொண்டிருகிறார் என்பதை வீடியோவாக மணிமேகலை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் அவர்கள் மாடு மேய்க்கவும் கிளம்பி இருக்கிறார்கள். அதையும் வீடியோவில் காட்டியுள்ளனர்.
இந்த வீடியோவுக்கு தற்போது வரை எட்டு லட்சம் பார்வைகள் கிடைத்து உள்ளது.