கொரோனா தொற்றால் உயிரிழந்த மேலும் 42 பேரின் விபரங்கள் நேற்று (29) அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,405 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று 29 ஆம் திகதி 06 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், மே மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் 28 ஆம் திகதி வரை கொவிட் நோயாளர்களில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். மே 14 ஆம் திகதி ஒருவர், மே 19 ஆம் திகதி 02 பேர், மே 20 ஆம் திகதி ஒருவர், மே 21 ஆம் திகதி 02 பேர், மே 22 ஆம் திகதி 02 பேர், மே 23 ஆம் திகதி 03 பேர், மே 25 ஆம் திகதி 03 பேர், மே 26 ஆம் திகதி 02 பேர், மே 27 ஆம் திகதி 10பேர், மே 28 ஆம் திகதி 10பேர் உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய், ஹட்டன், நாவலப்பிட்டி, பொகவந்தலாவ, குண்டசாலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் உயிரிழந்தனர்.
35 வயதான பெண், 37 வயதான ஆணும் உயிரிழந்தவர்களில் அடங்குகிறார்கள்.