தமிழ்க்கவிஞர் வைரத்துக்கு அறிவிக்கப்பட்ட ஓஎன்வி விருதை மறுபரிசீலனை செய்யப்போவதாக குழுவினர் அறிவித்து உள்ளனர். வைரமுத்துக்கு விருது அறிவிங்ககப்பட்டுள்ளதற்கு கேரள நடகைகள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அவருக்கு அறிவிக்கப்பட்ட விருது குறித்து மறு பரிசீலனை செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கேரளாவின் மரியாதைக்குரிய இலக்கிய விருதுகளில் ஒன்று ஓஎன்வி குரூப் இலக்கிய விருது. ஓஎன்வி குறுப் விருது என்பது ஞானபீட விருது பெற்ற ஓஎன்வி குறுப் பெயரில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டுவரும் இலக்கிய விருதாகும். ஓஎன்வி குறுப் இலக்கிய விருது என்பது மலையாளத்திலும் வேறு இந்திய மொழிகளிலும் எழுதும் கவிஞர்களுக்கு அளிக்கப்படும் விருதாகும். இந்த விருதில் ஒரு கேடயமும் 3 லட்ச ரூபாய் பணமும் தரப்படும்.
இந்த ஆண்டு, இந்த விருது தமிழக பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு வழங்கப்படுவதாக விருது வழங்கும் ஓஎன்வி கல்சுரல் அகாதெமி தெரிவித்திருக்கிறது. இதையடுத்து வைரமுத்து, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்த நிலையில், மலையாளத் திரையுலகைச் சேர்ந்த உமன் இன் சினிமா கலெக்டிவ், பல்வேறு புகார்களை எதிர்கொள்ளும் வைரமுத்துவுக்கு இந்த விருது எப்படி அளிக்கப்பட்டது என்பது குறித்து கேள்வியெழுப்பியது. இந்த விருது வைரமுத்துவுக்கு அளிக்கப்பட்டது குறித்து நடிகை பார்வதி உள்ளிட்டோர் கடுமையான விமர்சனங்களை எழுப்பினர்.
வைரமுத்து மீது ஏற்கனவே பாலியல் புகார்கள் உள்ளது. பாடகி சின்மயி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள், வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை தெரிவித்திருந்த நிலையில், அது தாடர்பாக மீடூ விவகாரமும் சமுக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டது.
இந்த நிலையில், வைரமுத்துவின் எழுத்துகளுக்காகவே இந்த விருது அளிக்கப்பட்டிருப்பதாகவும் அவருடைய நடத்தை ஆராய்வது தங்கள் நோக்கமல்ல என்று ஓஎன்வி குறுப் கல்சுரல் அகாடமியின் தலைவரும் இயக்குனருமான அடூர் கோபலகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.
ஆனால், அதை ஏற்க பல நடிகைகள், சமுக ஆர்வலர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, வைரமுத்துக்கு அறிவிப்பு குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் ஓஎன்வி கல்சுரல் அகாதெமியின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளத.
கேரள முதலவர் பினராயி விஜயன் இந்த அமைப்பின் தலைமைப் புரவலராக இருக்கிறார். மேலும் எம்.டி. வாசுதேவன் நாயர், பாடகர் கே.ஜே. ஜேசுதாஸ் ஆகியோரும் இந்த அமைப்பின் புரவலர்களாக உள்ளனர். மேலும் தேர்வுக் கமிட்டியில் கவிஞர் பிரபா வர்மா, மலையாள பல்கலைக்கழக துணை வேந்தர் அனில் வல்லத்தோள், எழுத்தாளர் ஆலங்கொடே லீலா கிருஷ்ணன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்த அமைப்பின் தலைவராக இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் செயல்பட்டுவருகிறார்.